மாநில அளவிலான கபடி போட்டி: குறிச்சி ஸ்போர்ட்ஸ் கிளப் வெற்றி

Added : டிச 02, 2019
Share
Advertisement
கோவை:மாநில அளவிலான கபடி முதல் சுற்று போட்டியில், குறிச்சி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி பெற்று, அடுத்த சுற்று போட்டிக்கு தகுதி பெற்றது.வேலந்தாவளம் வி.எல்.சி., கபடி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து, முதலாம் மாநில அளவிலான கபடி போட்டி, முனியப்பன் கோவில் மைதானத்தில் நேற்று நடந்தது.ஈரோடு, திருப்பூர், சேலம், தேனி, கோவை, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 46 அணிகள் பங்கேற்றன.

கோவை:மாநில அளவிலான கபடி முதல் சுற்று போட்டியில், குறிச்சி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி பெற்று, அடுத்த சுற்று போட்டிக்கு தகுதி பெற்றது.வேலந்தாவளம் வி.எல்.சி., கபடி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து, முதலாம் மாநில அளவிலான கபடி போட்டி, முனியப்பன் கோவில் மைதானத்தில் நேற்று நடந்தது.ஈரோடு, திருப்பூர், சேலம், தேனி, கோவை, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 46 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் அனைத்தும் 'நாக்- அவுட்' முறையில் நடந்தன.நேற்று நடந்த முதல் சுற்று போட்டியில், என்.எப்., வாரியர்ஸ் அணி, 30-17 என்ற புள்ளி கணக்கில், டி.எஸ்.சி., பிரதர்ஸ் அணியையும்; 2வது போட்டியில், பயர் பாய்ஸ் அணி, 40-38 என்ற புள்ளி கணக்கில், என்.எல்.எஸ்., பிரண்ட்ஸ் அணியையும் வென்றன.3வது போட்டியில், கார்கில் செவன்ஸ் அணி, 34-24 என்ற புள்ளி கணக்கில், ஜான்சன் அணியையும்; 4வது போட்டியில், விங்ஸ் ஆப் பயர் அணி, 22-20 என்ற புள்ளி கணக்கில், தடாகம் சி.எம்.ஆர்., அணியையும் வென்றன.5வது போட்டியில், ஜூனியர் போராளி அணி, 26-11 என்ற புள்ளி கணக்கில், ஜூனியர் எஸ்.கே., பிரதர்ஸ் அணியையும்; 6வது போட்டியில், குறிச்சி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, 20-13 என்ற புள்ளி கணக்கில், பாலக்காடு பராசக்தி அணியையும் வென்றன.வெற்றி பெற்ற அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X