டி.வி.எஸ்.நகரில் கால் வைக்கும் இடமெல்லாம் குழி!| Dinamalar

டி.வி.எஸ்.நகரில் கால் வைக்கும் இடமெல்லாம் குழி!

Added : டிச 02, 2019
Share

போக்குவரத்துக்கு இடையூறுபோத்தனுார், பாரதி நகரில், பாதாள சாக்கடை கால்வாய் 'மேன்ேஹால்' திறந்த நிலையில் உள்ளது. இதை தற்காலிகமாக மரக்கிளை மற்றும் செங்கல் வைத்து மறைத்துள்ளனர்; போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.-ராதாகிருஷ்ணன்,

பாரதி நகர்.

குழியால் அவதிமாச்சம்பாளையம், கல்லுக்குழி வீதி, அம்மணியம்மாள் காலனியில், குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி, முறையாக மூடப்படாமல் உள்ளது.- பாபு, அம்மணியம்மாள் காலனி.

சிக்னல் தெரிவதில்லைஅவிநாசி ரோடு, காளப்பட்டி ரோடு - சிட்ரா சந்திப்பில், போக்குவரத்து சிக்னலை மறைத்தபடி உள்ள, மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.- ராதாகிருஷ்ணன், பீளமேடு.

விளக்கு எரிவதில்லைசாய்பாபா காலனி, கே.கே.புதுார், ரத்தினசபாபதி வீதியில் உள்ள, தெருவிளக்கு கடந்த இரு மாதங்களாக எரிவதில்லை.- ராமசுந்தரம், ரத்தினசபாபதி வீதி.

தெருநாய் தொல்லைகாளப்பட்டி - சிட்ரா ரோடு, வீரியம்பாளையம் சாலையில், தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் சுற்றித்திரியும் நாய்கள், வாகனங்களில் செல்வோரை துரத்துகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.-ராமு, காளப்பட்டி.

சுகாதார சீர்கேடுசாய்பாபா காலனி, ஸ்ரீராம் லே-அவுட் வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- விசாலம், ஸ்ரீராம் லே-அவுட்.

சாலை படு மோசம்கணபதி, உடையாம்பாளையம், சுப்பநாயக்கன்புதுார் - சின்னவேடம்பட்டி ரோடு, பயன்படுத்த தகுதியற்ற நிலையில் உள்ளது; இதில் பயணிக்க, வாகன ஓட்டிகள் சாகசம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.- பிரபாகர், கணபதி.

சிறுவர் பூங்காவை பராமரிக்கணும்ராமநாதபுரம் ஒலம்பஸ், ஆறுமுகம் நகரில் உள்ள, சிறுவர் பூங்கா பராமரிப்பின்றி உள்ளது. இங்குள்ள விளையாட்டு உபகரணங்களும் சிதிலமடைந்துள்ளன.-சுரேந்திரன், ஒலம்பஸ்.

தார் சாலை அமைக்க வேண்டும்துடியலுார், கிழக்கு ரயில்வே ஸ்டேஷன் ரோடு, குண்டும் குழியுமாக உள்ளது. மண் சாலையாக இருப்பதால், மழை நேரங்களில், குளம் போல் தண்ணீர் தேங்குகிறது. இதை சீரமைத்து, தார் சாலை அமைக்க வேண்டும்.- குரு, துடியலுார்.

குடிநீர் வீண்மாநகராட்சி, 76வது வார்டுக்கு உட்பட்ட, பிருந்தாவன் கார்டனில், பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழியால், குழாய் உடைந்து, குடிநீர் வீணாகிறது.-ரவிச்சந்திரன், பிருந்தாவன் கார்டன்.

குழாய் உடைப்பு; வீணாகுது தண்ணீர்ஈச்சனாரி - மாச்சநாயக்கன்பாளையம் ரோட்டில், விநாயகர் கோவிலுக்கு பின்புறம், இரு இடங்களில், குழாய் உடைந்து, தண்ணீர் வீணாக சாலையில் ஓடுகிறது.- பாலசுப்ரமணி, மாச்சநாயக்கன்பாளையம்.

அம்மன் கோவில் அருகே அச்சம்இருகூர், அத்தப்பகவுண்டன்புதுார் அம்மன் கோவில் அருகில் உள்ள, இரண்டு மின் கம்பங்களிலும், விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரிவதில்லை; பக்தர்கள் அச்சப்படுகின்றனர்.- இளங்கோவன், அத்தப்ப கவுண்டன்புதுார்.

சேறும் சகதியுமாக மாறிய ரோடுதடாகம் ரோடு, டி.வி.எஸ்., நகர் ராஜலட்சுமி நகரில், குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி, சரியாக மூடப்படாததால், வாகனங்கள் செல்ல, செல்ல மீண்டும் குழி ஏற்பட்டுள்ளது. மழை நேரங்களில் சாலை, சேறும் சகதியுமாக மாறி விடுகிறது.- கோபிநாத், டி.வி.எஸ்., நகர்.

தெருவிளக்கு எரிவதில்லைவடவள்ளி, லிங்கனுார், அண்ணா நகர் ஐந்தாவது வீதியில் உள்ள, மின் கம்பங்களில், விளக்குகள் எரிவதில்லை. மின் வாரியத்துக்கு, பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.- முருகானந்தம், அண்ணா நகர்.

மின் கம்பத்தை மாற்றணும்பிச்சனுார் ஊராட்சி, தெற்கு வீரப்பனுார், விநாயகர் கோவில் வீதியில் உள்ள மின் கம்பம் சிதிலமடைந்துள்ளது. மின் விபத்து நடக்கும் முன், இக்கம்பத்தை அகற்றி, புதிய கம்பம் அமைக்க வேண்டும்.- ராமலிங்கம், தெற்கு வீரப்பனுார்.

ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் அவதிசுந்தரபுரம் - இடையர்பாளையம் ரோடு அரிஜன காலனி அருகில் சாலையோரம் ஆக்கிரமித்து நிருத்தப்படும் நான்கு சக்கர வாகனங்கலால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.- செந்தில், இடையர்பாளையம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X