பொது செய்தி

தமிழ்நாடு

குமரன் நகருக்கு வெளிச்சம் கிடைச்சாச்சு

Added : டிச 02, 2019
Advertisement

குமரன் நகருக்கு வெளிச்சம் கிடைச்சாச்சுவிளாங்குறிச்சி ரோடு, விநாயகபுரம், குமரன் நகரில் உள்ள மின் கம்பங்களில், பல மாதங்களாக விளக்குகள் எரியாமல் இருந்தது. இப்பகுதி இருளில் மூழ்கி, மக்கள் அவதிப்படுவது குறித்து, 'இன்பாக்ஸ்' பகுதியில் செய்தி வெளியானது. மின் வாரியத்தினர், இப்பகுதியில், ஆய்வு மேற்கொண்டு, எரியாத விளக்குகளை அகற்றி, புதிய விளக்குகளை பொருத்திச் சென்றுள்ளனர்.-சம்பத்குமார், குமரன் நகர்.

சுத்தமானது காந்தி மாநகர் பகுதி பீளமேடு, காந்திமாநகரில் குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது; இது குறித்து, 'இன்பாக்ஸ்' பகுதியில் படத்துடன் செய்தி வெளியானதை தொடர்ந்து, இப்பகுதியில் குப்பை அகற்றப்பட்டதுடன், தொட்டியும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. 'இப்பகுதியில் குப்பை கொட்டினால், நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது.- ேஷாபனாதேவி, காந்திமாநகர்.

சாலை சீரமைக்கப்பட்டது கோவை மாநகராட்சி, 18 வது வார்டுக்கு உட்பட்ட, நல்லாம்பாளையம் பிரதான ரோட்டில், புதிய தார் சாலை அமைத்து, 30 நாட்களில், திடீரென, சாலை நடுவில், பெரிய குழி ஏற்பட்டது. உடனடியாக குழியை மூட வேண்டும் என, 'வாசகர் வாய்ஸ்' பகுதியில், படத்துடன், செய்தி வெளியானதை தொடர்ந்து, குழி மூடப்பட்டது.-ராதாகிருஷ்ணன், நல்லாம்பாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X