பொது செய்தி

தமிழ்நாடு

புதருக்குள் பொழுதுபோக்கு பூங்கா...

Added : டிச 02, 2019
Advertisement

கோவையில் பொழுதுபோக்குக்காக ஏற்படுத்தப்பட்ட பூங்காக்கள், புதர் மண்டி காணப்படுவதால், காதலர்கள், கயவர்களின் சமூக விரோத செயல்களுக்கு உதவும் களங்களாக மாறி வருகின்றன. 'ஸ்மார்ட் சிட்டி' கனவு கண்டு வரும் மாநகராட்சியோ, எதையும் கண்டுகொள்வதாக தெரியவில்லை.புதர்மண்டி கிடக்கும் இப்பூங்காக்கள், சமூக விரோத செயல்களின் கூடாரமாகவும், காதல் ஜோடிகளின் இச்சை தீர்க்கும் செயல்களுக்கும் உதவி வருகின்றன.உதாரணமாக, சிங்காநல்லுார் அருகே கள்ளிமடை அடுத்து, 75வது வார்டு கதிரவன் கார்டனில் உள்ள, மாநகராட்சி பூங்காவை கூறலாம்.கிரவுண்டும், காடும்!கோவை சாய்பாபா காலனி அழகேசன் ரோடு முருகன் மில் குவார்ட்டர்ஸ் பகுதியில் உள்ள, மாநகராட்சி பூங்கா, பராமரிக்கப்பட்டு ஆண்டுகள் பல ஆகி விட்டன.குழந்தைகள் விளையாடும் பகுதியில், செடிகள் அதிகளவு வளர்ந்துள்ளதால், பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப் பூச்சிகளின் குடியிருப்புகளாக மாறி வருகின்றன. இரவில் விளக்குகளும் இல்லாததால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.பதற வைக்கும் புதர் குறிச்சி பூங்கா நகர் பகுதியில் அமைந்துள்ள பூங்கா முற்றிலும், புதர் மண்டி இருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, குடிமகன்கள் பூங்காவை மினிபாராகவே மாற்றி விட்டனர்.பி.என்.புதுார் ஜெகதீஸ் நகர் பகுதியில் உள்ள பூங்காவின் நிலை, மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது. செடி, கொடிகள் நிறைந்துள்ளதால், பயனின்றி உள்ளது.பகலில் முத்தக்காட்சிநகரின் மையப்பகுதியில் உள்ள வ.உ.சி., பூங்கா மற்றும் ரேஸ்கோர்ஸ் பகுதிகளில், நடக்கும் காதல் வேற லெவல். வகுப்புகளை புறக்கணித்து இங்கு வரும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஈடுபடும் காதல் லீலைகள், காலை முதல் மாலை வரை நீடிக்கிறது. பூங்கா காவலர்கள் எதையும் கண்டுகொள்வதில்லை.சமீபத்தில் பள்ளிக்குழந்தைகளை, இப்பூங்காவுக்கு சுற்றுலா கூட்டிச் சென்ற ஆசிரியர்கள், காதல் ஜோடிகளின் முத்தக்காட்சிகளை கண்டு பதறிப்போய், குழந்தைகளை கூட்டிக்கொண்டு ஓடியது குறிப்பிடத்தக்கது.இதன் உச்சம்தான், சீரநாயக்கன்பாளையம் பூங்காவில், மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை. மாநகராட்சி அதிகாரிகளே...சிறிது பூங்காக்கள் பக்கமும் உடனடியாக பார்வையை திருப்ப வேண்டும்.நகரின் மையப்பகுதியில் உள்ள வ.உ.சி., பூங்காவின் நிலை வேற லெவல். வகுப்புகளை புறக்கணித்து இங்கு வரும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஈடுபடும் காதல் லீலைகள், காலை முதல் மாலை வரை நீடிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X