நிரம்பிய கண்மாயில் ஆனந்தக்குளியல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிரம்பிய கண்மாயில் ஆனந்தக்குளியல்

Added : டிச 02, 2019
 நிரம்பிய கண்மாயில் ஆனந்தக்குளியல்

காரைக்குடி:தொடர் மழைக்கு காரைக்குடி செஞ்சை நாட்டார் கண்மாய் 10 ஆண்டுக்கு பின் நிரம்பி மறுகால் ஓடுவதால், அப்பகுதியினர் ஆனந்த குளியல் ஆடி வருகின்றனர்.

தென்மேற்கு, வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து மழை பெய்து வருவதால், காரைக்குடி பகுதி கண்மாய், ஊரணிகள் நிரம்பி வருகின்றன. இதனால் இத்தாலுகாவிற்கு உட்பட்ட விவசாயிகள் நடவு செய்த நெற்பயிரை அறுவடை செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர். கண்மாய்களில் நீர் தேங்கி வருவதால், நகர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துவருகிறது.

நகரில் பெரிய கண்மாய் செஞ்சை நாட்டார் கண்மாய். இக்கண்மாய் நிரம்பி வழிகிறது. கடந்த 10 ஆண்டுக்கு பின் இக்கண்மாய் நிரம்பி மறுகால் ஓடுவதால், அப்பகுதியினர் ஆனந்த குளியல் ஆடி வருகின்றனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது, இக்கண்மாய் பல ஆண்டாக துார் வாராததால், கருவேல மரங்கள், முட்புதர்கள் மண்டிக்கிடக்கிறது. துார்வாரப்பட்டிருந்தால், அதிக தண்ணீர் தேங்கி, பாசனத்திற்கு உதவியாக இருந்திருக்கும், என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X