உலகில் முதலில் வெளியான குழந்தை இலக்கியம் எது?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உலகில் முதலில் வெளியான குழந்தை இலக்கியம் எது?

Added : டிச 02, 2019
 உலகில் முதலில் வெளியான குழந்தை இலக்கியம் எது?

கோவை:குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா இலக்கிய வட்டம் சார்பில், குழந்தைகளுக்கான கலை இலக்கிய விழா, கோவை சேரன் நகர் பிருந்தாவன் மெட்ரிக் பள்ளி அரங்கில் நடந்தது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, சென்னை ஐகோர்ட் நீதிபதி மகாதேவன் பேசுகையில், ''அவ்வையார் எழுதிய ஆத்திச்சூடியே,உலகில் முதலில் எழுதப்பட்ட குழந்தை இலக்கியம். சிறந்த அறநெறி கருத்துக்களை ஆத்திச்சூடி வழியாக, குழந்தைகளுக்கு அவ்வை போதித்தார். குழந்தைகளுக்கான பாடல்களை பாரதி, பாரதிதாசன் போன்ற கவிஞர்கள் எழுதி இருந்தாலும், குழந்தைகளுக்கான முழுமையான இலக்கியத்தை அழ.வள்ளியப்பா படைத்தார். குழந்தைகளின் எண்ணமும், சிந்தனையும் சிறப்பாக இருந்தால், எதிர்கால சமுதாயம் சிறப்பாக அமையும் என்பதை, மனதில் கொண்டு, அவர் குழந்தை இலக்கியத்தை படைத்தார்,'' என்றார்.முன்னதாக, வள்ளியப்பாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தை பாடல்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு நுால் வெளியிட்டப்பட்டது. டாக்டர் கணேசனுக்கு, வள்ளியப்பா இலக்கிய விருது வழங்கப்பட்டது. கவிஞர்கள் சிற்பி, செல்லகணபதி, சேதுபதி, தேவிநாச்சியப்பன், விஜயா பதிப்பகம் வேலாயுதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X