சுகம் தரும் சுத்தமான காற்று! | Dinamalar

பொது செய்தி

இந்தியா

சுகம் தரும் சுத்தமான காற்று!

Added : டிச 02, 2019
காற்று மாசு, கட்டுப்பாடு, தொழிற்சாலை, சுவாச பிரச்னை

நாட்டின் தலைநகர் டில்லி உட்பட வட மாநிலங்கள் சமீபத்தில் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டன. சென்னையிலும் காற்று மாசுபாடு அளவு அதிகரித்துள்ளது. நாட்டில் மாசு இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்க வலியுறுத்தி தேசிய மாசு கட்டுபாட்டு தினம் டிச., 2ல் கடைபிடிக்கப்படுகிறது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செயல்பட்ட யூனியன் கார்பைட் நிறுவனத்தில், 1984 டிச., 2 -3ம் தேதிகளில் விஷவாயு கசிந்தது. இது உலகின் மிக பெரிய தொழிற்சாலை பேரழிவாக கருதப்படுகிறது. 'மித்தோ ஐசோசைனட்' என்ற விஷவாயு தாக்கியதில், 3,787 பேர் பலியானதாக மத்திய பிரதேச அரசு தெரிவித்தது. ஐந்து லட்சம் பேர் பல விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகினர். இதுபோல மீண்டும் ஒரு கொடிய சம்பவம் நிகழாமல் தடுக்கும் நோக்கத்துடன், மத்திய அரசு சார்பில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


என்ன பாதிப்பு


தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள், வாயுக்களால் நீர், நிலம், வனம் போன்ற இயற்கை வளங்கள் பாதிக்கப்படுகின்றன. வாகனங்கள் வெளியிடும் புகையாலும் காற்று மாசடைகிறது. மாசு காற்றை சுவாசிப்பதால், நுரையீரல், இருதயம், சுவாச பிரச்னை போன்றவை ஏற்படுகிறது. மாசு கட்டுப்பாட்டு சட்டங்களை கடைபிடித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.


10


உலகில் பத்தில் ஒன்பது பேர் பாதுகாப்பான காற்றை சுவாசிப்பது இல்லை.


70


உலகில் காற்று மாசுபாட்டால் ஆண்டுதோறும் 70 லட்சம் பேர் பலியாகின்றனர்.


-இன்று தேசிய மாசு காட்டுபாட்டு தினம்

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X