தனித்தீவாக மாறிய குருத்தமண்குண்டு நீரில் நீந்தி பள்ளி செல்லும் மாணவர்கள்

Added : டிச 02, 2019
Advertisement

பெரியபட்டினம்:பெரியபட்டினம் ஊராட்சியில் உள்ள குருத்த மண்குண்டு கிராமத்தை மழை நீர் சூழ்ந்துள்ளதால் நீச்சலடித்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்.

குருத்தமண்குண்டு மீனவர்கள் வசிக்கும் குக்கிராமமாகும்.பெரிய பட்டினம் கப்பாலாற்று மன்னார் வளைகுடா கடற்கரைக்கு அருகே இக்கிராமம் உள்ளது.பெரியபட்டினம் வடக்கு பகுதிக்கு செல்ல500 மீ., தொலைவிற்கு தாழ்வான பாதையாக உள்ளது. கனமழையால் கடந்த 10 நாட்களாக மிகுதியான நீர்வரத்து காரணமாக குருத்தமண் குண்டு கிராமம் தனி தீவாக மாறி விட்டது.

ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் ராஜேந்திரன் கூறிய தாவது: பெரிய பட்டினம் அரசு மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள்6 அடி ஆழமுள்ள நீரில் நீந்தி ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். பெரிய பட்டினம் செல்வதற்குரிய பிரதான சாலை முழுவதும் நீரில் முழ்கியுள்ளதால், 50 குடும்பத்தினரும் அவசர அத்தியாவசிய தேவைக்காக அவதிக்குள்ளாகின்றனர்.

10 தினங்களாக வற்றாத வெள்ளநீரால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்நனையாமல் இருக்க சீருடைகள்,மாற்று உடைகளுடன், பெற் றோருடன் வேறு வழியின்றி நீந்தி செல்கின்றனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X