சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடுரோட்டில் விழுந்த பாறை

Added : டிச 02, 2019
Advertisement
 நடுரோட்டில் விழுந்த பாறை

வடவள்ளி சுற்றுவட்டாரப்பகுதிகளில், நேற்றுமுன்தினம் இரவு கனமழை பெய்தது. இதில், மருதமலை அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்லும் மலைப்பாதையில், 7 வளைவில், சாலையோரத்தில் மண்சரிவு ஏற்பட்டது.
இதில், சாலையோரத்தில் இருந்த பாறைக்கல் சரிந்து, சாலையில் விழுந்தது. இரவில், கல் சரிந்ததால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நேற்று காலை, கோவில் நிர்வாகத்தினர், போலீசார், வனத்துறையினர், பொக்லைன் உதவியுடன், அப்பாறையை அகற்றினர். இதனையடுத்து, மலைப்பாதையில் போக்குவரத்து சீரானது.நல்ல வேளை!கோவை - மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையத்தில் மேம்பாலம் கட்டுமானப்பணி நடக்கிறது. சாலையின் வலது, இடது பக்கங்களில் இரும்புத் தடுப்புகள் வைக்கப்பட்டதால், சாலை மிகவும் குறுகலானது. வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. நேற்று பைக்கில் தெற்கு வடக்காக சென்ற இளைஞர், திடீரென்று சாலை தடுப்பை தாண்டி மேற்கிலிருந்து கிழக்காக சென்றார். குறுக்கே வந்த கார், உடனடியாக 'பிரேக்' போட்டு நிறுத்தியதால், அடுத்தடுத்து வந்த கார்கள் ஒன்றன் மீது ஒன்றாக உரசி நின்றன. அச்சாலை முழுக்க களேபரமாக மாறியது.சிறிது நேரத்தில் சீரானது.சொன்னால் கேட்காதா!கோவை அரசு மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளிலும், மருத்துவமனைக்குள் ஒலி எழுப்பக்கூடாது என, நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனைக்குள் பைக்கில் வந்த ஒரு நபர், அதிக சப்தம் கொண்ட ஹாரனை ஒலிக்க விட்டார். இதையடுத்து, அப்பகுதியில் நின்றிருந்த செக்யூரிட்டி அவரை தடுத்து நிறுத்தி, கடுமையாக எச்சரித்தார்.
அதன் பின்னும் அந்த இளைஞர், ஹாரனை ஒலிக்க விட்டார். இதையடுத்து, அப்பகுதியில் இருந்த பார்வையாளர்கள் பலரும் அவரை கடுமையாக எச்சரித்ததால், அமைதியாக அங்கிருந்து நகன்றார்.எங்ககிட்டயேவா!காந்திபுரம் பேருந்து நிலையத்தில், நேற்று கல்லுாரி மாணவர்கள் சிலர் பேருந்துக்காக காத்திருந்தனர்.
அவர்களிடம், திருநங்கைகள் இருவர் ஆசீர்வாதம் செய்து பணம் கேட்க, மாணவர்கள் ஐந்து ரூபாயை எடுத்து கொடுத்தனர். சில நிமிட இடைவெளியிலேயே, மேலும் மூன்று திருநங்கைகள், பணம் கேட்கவே, 'இப்போதுதான் தந்தோம், பணமில்லை' என்று கூறினர். பொருட்படுத்தாமல், இரண்டு ரூபாய் கூட இல்லையா என பேக்குகள், சட்டைப்பையில் கைவிட்டு தொந்தரவு செய்தனர். பொதுமக்கள் வேடிக்கை பார்க்க, சங்கடத்திற்குள்ளான மாணவர்கள், வேறுவழியின்றி பர்சிலிருந்து 20 ரூபாயை எடுத்து தந்தனர். பணத்தை வாங்கியதும் ஆசீர்வாதம் செய்து, அமைதியாக இடத்தைவிட்டு நகர்ந்தனர்.
ஆம்புலன்சுடன் பயணம் கோவை சத்தி ரோட்டில், நேற்று காலை ஆம்புலன்ஸ் ஒன்று சைரனை ஒலிக்க விட்டுக் கொண்டு வேகமாக வந்து கொண்டிருந்தது. ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு அனைத்து வாகனங்களும் ஒதுங்கின. ஆம்புலன்ஸின் பின்னால், இளைஞர்கள் சிலர் வேகமாக தொடர்ந்து சென்றனர். போக்குவரத்து நெரிசலால், வாகனங்கள் நின்றன. அப்போது வாகனத்தில் சென்ற முதியவர் ஒருவர் 'ஏம்பா...இப்படி பண்றீங்க. பார்த்து வண்டிய ஓட்டுங்கப்பா' என கூறினார். 'அவசரமாக போகணும் சார்' என்றனர். 'அப்போ ஆம்புலன்ஸில் போக வேண்டியது தானே' என, இன்னொரு வாகன ஓட்டி கூற, இளைஞர்கள் விழி பிதுங்கி நின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X