பொது செய்தி

தமிழ்நாடு

இந்த வாரம்...ஆரவாரம்!

Added : டிச 02, 2019
Advertisement

டிச.,2: பிரம்ம சூத்திரம்எது உபநிடதங்களில் உள்ளதோ, எதுவெல்லாம் கீதையில் பேசப்பட்டுள்ளதோ அதுவெல்லாம் பிரம்ம சூத்திரத்தில் அடக்கம். பிரம்ம சூத்திரம் குறித்து, ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷன் சார்பில் சிறப்பு சொற்பொழிவு, காலை, 10:00 மணி முதல் நடக்கிறது.

டிச.,2: கும்பாபிஷேக விழாவினைகளை அகற்றி வெற்றி அருளும் வள்ளல், வேழமுகத்தவன். குனியமுத்துார், வலம்புரி பால கணபதி கோவிலில் விநாயகனுக்கு கும்பாபிஷேக விழா நடக்கிறது. காலை, 9:00 மணி முதல் 10:00 மணி வரை நடக்கும் விழாவில், பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கலந்துகொண்டு அருளாசி வழங்குகிறார்.

டிச., 4: ஈஷா யோகா வகுப்புகள்ஈஷா யோக மையம் சார்பில், தொன்மையான 'ஷாம்பவி மகாமுத்ரா' ஏழு நாட்கள் யோகா பயிற்சி நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 6:00 முதல் 8:30 மணி வரை, காலை, 10:00 முதல் 12:30 மணி வரை மற்றும் மாலை, 6:00 முதல் இரவு, 8:30 மணி வரை என மூன்று பிரிவுகளாக வகுப்புகள் நடக்கின்றன. பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள முன்பதிவு செய்வது அவசியம்.

டிச.,5: பாகவத பாராயணம்ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலில், மாலை, 4:00 மணியிலிருந்து, டிச.,12ம் தேதி வரை, மகாபாகவத பாராயணம் நடக்கிறது. நாளை முதல் டிச.,12ம் தேதி வரை, மகாவிஷ்ணு தசாவதார சந்தன அலங்காரத்தில் மகா விஷ்ணு காட்சி தருகிறார்.

டிச.,6: ஷாப்பிங் கண்காட்சிஇந்த வீக் எண்ட் பிளானுக்கு, நீங்கள் அதிகம் மெனக்கெட வேண்டாம். ஜூவல்லரிகள், பேஷன் ஆடைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், எலக்ட்ரானிக் மற்றும் பர்னிச்சர் பொருட்கள், ஆட்டோமொபைல்ஸ், ஹெல்த் மற்றும் பியூட்டி கேருடன் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஷாப்பிங் கண்காட்சி நடக்கிறது. வரும் 8ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில், புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் ஆபரும் உண்டு.

டிச.,8: மாற்றத்துக்கான வாக்கத்தான்தங்கள் மாற்றத்தை சாதனைகளால் வெல்பவர்கள், மாற்றுத்திறனாளிகள். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களிலும் சிறப்பு கவனம் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்காக, சிறப்பு வாக்கத்தான் நடக்கிறது. மாணவர்கள், தனிநபர்கள், தாய் மற்றும் குழந்தை, குடும்பத்தினர் என பல்வேறு பிரிவுகளில் பங்கு பெறலாம்.

டிச.,8: திருமந்திரம் அறிமுகம்ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற நல்லிணக்க அறிவுரையை, பல்லாண்டுகளுக்கு முன்பே திருமந்திரத்தில் விளக்கியவர் திருமூலர். ஆர்ஷ வித்யா குருகுலம் சார்பில், 'திருமந்திரம் ஒர் அறிமுகம்' என்ற தலைப்பில், வகுப்புகள் நடக்கின்றன. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை, 3:00 முதல் 4:00 மணி வரை வகுப்புகள் நடக்கும். பத்துப்பகுதிகளிலிருந்து, பகுதிக்கு பத்து பாடல்கள் வீதம், நுாறு பாடல்கள் கற்பிக்கப்படுகின்றன.

டிச.,8: பகவத்கீதை எல்லா உயிர்களையும் சமமாக நினைப்பவன், உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான் என போதிக்கும் பகவத்கீதை, வாழ்வை ஆராதித்து வாழ கற்றுத்தருகிறது. சீரடி சாய்பாபா துவாரகமாயி கோவிலில், பகவத்கீதை சொற்பொழிவு.மாலை: 6:00 மணிக்கு நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X