பொது செய்தி

தமிழ்நாடு

பற்சிதைவு ஏற்படுவது எதனால்? விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்

Added : டிச 02, 2019
Advertisement
 பற்சிதைவு ஏற்படுவது எதனால்? விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்

கோவை:இந்திய பல் மருத்துவ சங்க தமிழக கிளை மற்றும் இந்திய பல் மருத்துவ சங்க கோவை கிளை சார்பில், 34வது மாநில மாநாடு, கோவை அவிநாசி ரோடு ஜென்னீஸ் கிளப்பில் நேற்று நிறைவடைந்தது.மாநாட்டின் முக்கிய நிகழ்வான கருத்தரங்கில் பல்வேறு தலைப்புகளில், பல் மருத்துவ நிபுணர்கள் சிறப்புரையாற்றினர்.இதில் சேலம் பல் முகம், தாடை சீரமைப்பு நிபுணர் டாக்டர் ஜார்ஜ் பால் பேசுகையில், ''இன்று மருத்துவமனைகளுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்துள்ளது.
அதை தடுக்க, நோயாளிக்கு வழங்கப்படும் சிகிச்சை விபரங்களை ஆவணப்படுத்த வேண்டும். அப்போதுதான் சட்டரீதியான பிரச்னைகளை சமாளிக்க முடியும்,'' என்றார்.மாநாட்டை முன்னிட்டு, கோவை நேரு ஸ்டேடியத்தில், மராத்தான் போட்டிகள் நடந்தன.
விழா ஒருங்கிணைப்பு செயலாளர் சுரேந்திரன் கூறுகையில், ''இரவில் பல் துலக்காததால், பற்சிதைவு ஏற்படுகிறது. ''இதை வலியுறுத்தவே மராத்தான் நடத்தப்பட்டது. 5,200 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற, 1,000 பேருக்கு டி-சர்ட், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன,'' என்றார்.முன்னதாக, போட்டியை எஸ்.பி., சுஜித்குமார் துவக்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை சரக டி.ஐ.ஜி., கார்த்திகேயன் பரிசுகளை வழங்கினார். விழா ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாபு, உறுப்பினர் அன்னபூரணி பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X