பொது செய்தி

தமிழ்நாடு

அரசுப்பள்ளி மைதானத்தில், 'குளம்': நிரந்தர தீர்வு காணாமல் ஏனிந்த மெத்தனம்

Added : டிச 02, 2019
Advertisement
 அரசுப்பள்ளி மைதானத்தில், 'குளம்': நிரந்தர தீர்வு காணாமல் ஏனிந்த மெத்தனம்

கோவை:குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், தொடர் மழை காரணமாக தேங்கும் தண்ணீரை வெளியேற்ற முடியாமல், மண் கொட்டி மூட, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிரந்தர தீர்வுக்கு வழிவகை செய்யாமல், மெத்தனமாக அதிகாரிகள் செயல்படுவதாக, பெற்றோர் ஆதங்கப்படுகின்றனர்.குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, 3.7 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு, 185 மாணவர்கள் படிக்கின்றனர்.
அதிக வகுப்பறைகள், மைதான வசதி இருந்தும், குளத்திற்கு அருகில் பள்ளி இருப்பதால், மாணவர் சேர்க்கை சரிந்து வருகிறது.தொடர் மழையால், கடந்த அக்., மாதம், குளத்தில் இருந்து தண்ணீர் கசிந்து, பள்ளி மைதானத்தை ஆக்கிரமித்தது. இத்தண்ணீரை மோட்டார் மூலம், உறிஞ்சி வெளியேற்ற முயற்சித்த, மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் பலனளிக்கவில்லை.தேங்கிய நீரில் இருந்து, கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க, பிளீச்சிங் பவுடர் தெளித்து, மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.
வெயில் அடிக்கும் போது, இத்தண்ணீரை அகற்ற, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.தொடர் மழையால் தேங்கும் மழைநீரின் அளவு, தற்போது அதிகரித்து கொண்டே போகிறது. தண்ணீரை வெளியேற்ற நிரந்தர தீர்வு காணாமல், பள்ளத்தில் மண் கொட்டி மூட, ஏற்பாடுகள் நடப்பதாக பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.மழை தொடர்ந்து பெய்வதால், தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் பலன் தரவில்லை. மண் கொட்டுவது நிரந்தர தீர்வாக அமையாது. மழை நின்ற பிறகாவது, உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு சுகாதார சீர்கேடு தொடர்பான பிரச்னைகள் வராமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.- சாந்திதலைமையாசிரியை, குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X