இறைச்சி கடைகளில் பாலிதீன் பை பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இறைச்சி கடைகளில் பாலிதீன் பை பறிமுதல்

Added : டிச 02, 2019

கோவை:கோவை நகரிலுள்ள இறைச்சி கடைகளில், நேற்று மாநகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டதில், இரண்டு டன் பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.கோவை நகரில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து, நேற்று கோவை நகரில் மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் உத்தரவின் பேரில், கோவை நகரில் புலியகுளம், சுங்கம், கவுண்டம்பாளையம், கணபதி, தடாகம் சாலை, செல்வபுரம், பி.என்.புதுார் பகுதிகளில், திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.அப்போது பெரும்பாலான இறைச்சி வியாபாரிகள், பாலிதீன் பைகளில் இறைச்சியை பேக் செய்து கொடுப்பது தெரியவந்தது. பாலிதீன் பைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, பாலிதீன் இருப்பு வைத்திருக்கும் அளவுக்கு ஏற்ப, அபராதத்தையும் விதித்தனர்.நேற்று காலை துவங்கிய திடீர் சோதனை, மாலை வரை நீடித்தது. 2 டன் எடை கொண்ட பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.தொடர்ந்து இது போன்று, பாலிதீன் பயன்படுத்துவோர் மீது, இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும் என்று, மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X