குனியமுத்துார்:குனியமுத்துார் அருகே, புதியதாக கட்டப்பட்ட மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக கட்டடம் திறப்பு விழா நடந்தது.அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம், 7.41 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. அமைச்சர் வேலுமணி கட்டடத்தை திறந்து வைத்து, மரக்கன்று நட்டார். பின் அவர் பேசுகையில், ''வெள்ளலுாரில், ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் பணிக்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் பணி துவங்கும்,'' என்றார்.தொடர்ந்து கருணை அடிப்படையில், 37 வாரிசுகளுக்கு பணி ஆணை வழங்கினார். மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார், துணை கமிஷனர், உதவி கமிஷனர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.