மழை பாதிப்பு பகுதிகள் பாண்டியன் எம்.எல்.ஏ., பார்வை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழை பாதிப்பு பகுதிகள் பாண்டியன் எம்.எல்.ஏ., பார்வை

Added : டிச 02, 2019
Share
பரங்கிப்பேட்டை:மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களை, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் பாண்டியன் எம்.எல்.ஏ., பார்வையிட்டார்.கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல்வேறு கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. என்.எல்.சி., உபரி நீரால், கம்மாபுரம் ஒன்றியம் மேல்பாதி, ரோமாபுரி கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்ததால், அப்பகுதியினர் பாதுகாப்பான இடங்களில்
 மழை பாதிப்பு பகுதிகள்  பாண்டியன் எம்.எல்.ஏ., பார்வை

பரங்கிப்பேட்டை:மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களை, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் பாண்டியன் எம்.எல்.ஏ., பார்வையிட்டார்.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல்வேறு கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. என்.எல்.சி., உபரி நீரால், கம்மாபுரம் ஒன்றியம் மேல்பாதி, ரோமாபுரி கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்ததால், அப்பகுதியினர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு கடலுார் கிழக்கு மாவட்ட செயலர் பாண்டியன் எம்.எல்.ஏ., நேரில் சென்று பார்வையிட்டார்.

பொதுமக்களுக்கு, தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.அவருடன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்.பி., இளங்கோவன், ஒன்றிய செயலர்கள் முனுசாமி, சிவபிரகாசம், நிர்வாகிகள் ராஜபாண்டியன், ஜெயசீலன், விநாயகம், ரகுராமன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X