சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ., மரணம் குறித்து அவதுாறு பரப்பியவர் கைது

Added : டிச 02, 2019
Share
Advertisement
கருமத்தம்பட்டி:அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கனகராஜ் மரணம் குறித்து, சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்பிய, போலி பத்திரிக்கை நிருபர், சிறையில் அடைக்கப்பட்டார்.கடந்த, ஏப்., மாதம், சூலுார் தொகுதி எம்.எல்.ஏ., கனகராஜ் மரணம் குறித்தும், அ.தி.மு.க., பிரமுகர் தெப்பீஸ்வரன் குறித்தும், 'யூடியூப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதுாறு பரவியது.இதுகுறித்து, தெப்பீஸ்வரன் கருமத்தம்பட்டி போலீசில்

கருமத்தம்பட்டி:அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கனகராஜ் மரணம் குறித்து, சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்பிய, போலி பத்திரிக்கை நிருபர், சிறையில் அடைக்கப்பட்டார்.கடந்த, ஏப்., மாதம், சூலுார் தொகுதி எம்.எல்.ஏ., கனகராஜ் மரணம் குறித்தும், அ.தி.மு.க., பிரமுகர் தெப்பீஸ்வரன் குறித்தும், 'யூடியூப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதுாறு பரவியது.இதுகுறித்து, தெப்பீஸ்வரன் கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், போலி பத்திரிக்கை நிருபர், கோவை பிள்ளையார்புரத்தை சேர்ந்த பாஸ்கரன் மகன் பவுர்ணமி நிலவன், 47, சம்மந்தப்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X