பொது செய்தி

தமிழ்நாடு

நொய்யல் குளங்கள் பெருமளவு நிரம்பின 

Added : டிச 02, 2019
Advertisement

திருப்பூர்:கோவை அருகே, மேற்குத்தொடர்ச்சி மலை, தொம்பிலிபாளையத்தில் நொய்யல் ஆறு பிறக்கிறது.இந்த ஆறு, பேரூர், கோவை நகர், சூலுார், திருப்பூர், கொடுமணல், காங்கயம் வழியாக கரூர் மாவட்டம் வரை, 170 கி.மீ., துாரம் நீள்கிறது. பின், நொய்யல் என்னும் கிராமத்தில் காவிரி நதியுடன் கலக்கிறது.
நொய்யல் ஆற்றில் ஆண்டு முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதில்லை.மாறாக, ஆண்டுக்கு பத்து மாதங்கள் வரை, ஆலந்துறை வரை மட்டுமே தண்ணீர் வரத்து காணப்படுகிறது. அப்போது, அணைக்கட்டுகள் மூலம் தடுக்கப்படும் தண்ணீர், சிறிய வாய்க்கால் மூலமாக அருகேயுள்ள குளத்தை சென்றடைகிறது.அதன்படி, நொய்யல் ஆறு கடக்கும் நான்கு மாவட்டங்களில், ஆற்றின் குறுக்கே, 23 அணைக்கட்டுகள் வாயிலாக, 31 குளங்கள் உள்ளன. தற்போது, பரவலாக மழை பெய்து வரும் நிலையில், குளங்களுக்கான தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், அனைத்து குளங்களும், பெருமளவு நிரம்பும் நிலையில் உள்ளன.பொதுப்பணித்துறையினர் கூறுகையில், 'கடந்த சில தினங்களுக்கு முன், மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையின் காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.அதன் வாயிலாக, பெரும்பாலான குளங்கள், 75 சதவீத அளவில் நிறைந்தன. தற்போது, தொடர்ந்து, பரவலாக மழை பெய்வதால், பெருமளவு குளங்கள் நிரம்பியுள்ளன,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X