சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கம்மாபுரம் அருகே சாலை மறியல்

Added : டிச 02, 2019
Advertisement

கம்மாபுரம்:கம்மாபுரம் அருகே வடிகால் வாய்க்காலை துார்வாரக் கோரி, கிராம மக்கள் சாலை மறியல் செய்ததால், விருத்தாசலம் - புவனகிரி சாலையில், 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

கம்மாபுரம் அடுத்த கோபாலபுரம் காலனியில், வடிகால் வாய்க்கால் துார்ந்தது. இதனால், நேற்றுமுன்தினம் பெய்த கனமழையால், குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கியது. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று காலை 11:30 மணியளவில் விருத்தாசலம் - புவனகிரி சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்.கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ், துணை பி.டி.ஓ., முருகன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.இதனால், விருத்தாசலம் - புவனகிரி சாலையில், 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X