பொது செய்தி

தமிழ்நாடு

வாரச்சந்தை மேம்பட வசப்படுமா ரூ.5 கோடி!

Added : டிச 02, 2019
Share
Advertisement
அவிநாசி:அவிநாசி பேரூராட்சி, கைகாட்டிப்புதுாரில் வாரச்சந்தை செயல்படுகிறது. புதன்தோறும் கூடும் சந்தையில், 300க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படுகின்றன.சந்தையை சுற்றி, தடுப்புச்சுவர் உயரமாக இல்லாததால், சந்தைக்கு வெளிப் புறம் உள்ள, குடியிருப்புவாசிகள் மற்றும் கடைக்காரர்கள், குப்பை, கழிவு களை வாரச்சந்தைக்குள் கொட்டி விடுகின்றனர்.சில நேரங்களில், மலைபோல் குப்பை குவிந்து

அவிநாசி:அவிநாசி பேரூராட்சி, கைகாட்டிப்புதுாரில் வாரச்சந்தை செயல்படுகிறது. புதன்தோறும் கூடும் சந்தையில், 300க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படுகின்றன.சந்தையை சுற்றி, தடுப்புச்சுவர் உயரமாக இல்லாததால், சந்தைக்கு வெளிப் புறம் உள்ள, குடியிருப்புவாசிகள் மற்றும் கடைக்காரர்கள், குப்பை, கழிவு களை வாரச்சந்தைக்குள் கொட்டி விடுகின்றனர்.சில நேரங்களில், மலைபோல் குப்பை குவிந்து விடுகிறது. அவற்றை அகற்ற, பேரூராட்சி ஊழியர்கள், சிரமப்படுகின்றனர். சந்தைக்கு, 'கேட்' இல்லை; திறந்தநிலையில் இருப்பதால், இரவில், சந்தைக்குள் அமர்ந்து மது அருந்துவது உட்பட சமூக விரோத செயல்களில் பலரும் ஈடுபடுகின்றனர்.சந்தையை ஒட்டி, இலங்கை தமிழர்கள் வசிக்கும் குடியிருப்பு உள்ள நிலையில், சந்தையில் 'கேட்' அமைக்க சாத்தியமில்லை என கூறப்படுகிறது.பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:வாரச்சந்தையில், கூடுதல் கடை அமைப்பது, தடுப்புச்சுவர் எழுப்புவது போன்ற கட்டமைப்பை மேம்படுத்த, அரசிடம், 5 கோடி ரூபாய் நிதி கேட்டு, கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்தாண்டு, நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம்.அதேநேரம், சந்தையை ஒட்டியுள்ள ராஜன் நகரில், 80 குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்பு பகுதி, பழங்கரை ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது.ஊராட்சி நிர்வாகம் சார்பில், தினசரி குப்பை அள்ளப்படாததால், அங்குள்ள குடியிருப்புவாசிகள், சந்தைக்குள் குப்பையை கொட்டி விடுகின்றனர். இதுகுறித்து, பழங்கரை ஊராட்சி நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது, ராஜன் நகரை, பேரூராட்சியுடன் இணைத்து விட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X