கடலுார்:கடலுார் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் நடைபெற இருந்த கேங்மேன் (பயிற்சி) உடல் தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி மழையின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கடலுார் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சத்தியநாராயணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், 'தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கேங்மேன் பதவிக்கு கடலுார் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் 2.12.19 மற்றும் 3.12.19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு , கடும் மழையின் காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது. அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும், மேலும் விபரங்களை Tangedco.gov.in என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்' என கூறப்பட்டுள்ளது.