பொது செய்தி

தமிழ்நாடு

1,008 சங்காபிேஷகம் பக்தர்கள் பரவசம்: ஷீரடி ஸ்ரீசாய்பாபா கோவிலில் கோலாகலம்

Added : டிச 02, 2019
Advertisement
 1,008 சங்காபிேஷகம் பக்தர்கள் பரவசம்: ஷீரடி ஸ்ரீசாய்பாபா கோவிலில் கோலாகலம்

திருப்பூர்:திருப்பூரில், ஷீரடி ஸ்ரீசாய்பாபா கோவிலில் நடந்த, 1008 சங்காபி ேஷக விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருப்பூர், யுனிவர்சல் தியேட்டர் ரோடு, ஷீரடி ஸ்ரீசாய்பாபா கோவில், ஏழாம் ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு, கோலாட்டம், கும்மியாட்டம், வாண வேடிக்கையுடன், பக்தர்களின் திருவிளக்கு ஊர்வலம் மற்றும் பாபா பல்லக்கு ஊர்வலம் நடந்தது. பார்க் ரோட்டில் துவங்கிய ஊர்வலம், வாவிபாளையம் வழியாக மீண்டும் கோவிலை சென்றடைந்தது.நேற்று காலை, 8:00 மணிக்கு, அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள் முன்னிலையில், கணபதி ஹோமம் மற்றும், 1008 சங்காபிஷேக பூஜை மற்றும் சங்கு தீர்த்தம் மூலம், சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இவ்விழாவிற்கு, எம்.எல்.ஏ., குண சேகரன், தலைமை வகித்தார். திருப்பணிக்குழு தலைவர் கிருஷ்ணகுமார், முன்னிலை வகித்தார்.இதையடுத்து, ஆரத்தி, பஜனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பூர் ஸ்ரீ ஷீரடி சாய் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் அரிஸ்டோஎஸ்.ரவி, செயலாளர் ஏ.சக்திவேல், இணைச் செயலாளர் எஸ்.சக்திவேல், பொருளாளர் செந்தில்நாராயணன், துணைத்தலைவர் ஆனந்த் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X