சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை பள்ளத்தில் மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்தவர் பலி

Added : டிச 02, 2019
Share
Advertisement
பண்ருட்டி:எல்.என்.புரத்தில் சாலையின் மெகா பள்ளத்தில், மோட்டார் சைக்கிளில் தவழி விழுந்தவர் இறந்தார்.பண்ருட்டி அடுத்த பூங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன்,59; வீரப்பெருமாநல்லுாரில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இவர் பணி முடித்து கடந்த ௨௩ம் தேதி இரவு வீடு திரும்பினார். எல்.என்., புரம் வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலை, வ.உ.சி., நகர் பஸ்

பண்ருட்டி:எல்.என்.புரத்தில் சாலையின் மெகா பள்ளத்தில், மோட்டார் சைக்கிளில் தவழி விழுந்தவர் இறந்தார்.

பண்ருட்டி அடுத்த பூங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன்,59; வீரப்பெருமாநல்லுாரில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இவர் பணி முடித்து கடந்த ௨௩ம் தேதி இரவு வீடு திரும்பினார். எல்.என்., புரம் வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலை, வ.உ.சி., நகர் பஸ் நிறுத்தம் அருகே சாலையின் நடுவே மழை நீர் தேங்கி இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிளோடு விழுந்தார்.இதில் படுகாயம் அடைந்த பாலசுப்ரமணியன், சென்னை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நேற்று இறந்தார்.இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X