லண்டன் தாக்குதல்; ஐ.எஸ்., பொறுப்பேற்பு

Updated : டிச 02, 2019 | Added : டிச 02, 2019 | கருத்துகள் (24)
Share
Advertisement
லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் உள்ள லண்டன் பாலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்தோர் மீது, சமீபத்தில் ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்தினார். இதில், இரண்டு பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவரை, போலீசார் சுட்டுக் கொன்றனர். விசாரணையில், அவருடைய பெயர்,
ISIS,London, London bridge,லண்டன், தாக்குதல், ஐ.எஸ்., பொறுப்பேற்பு

இந்த செய்தியை கேட்க

லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் உள்ள லண்டன் பாலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்தோர் மீது, சமீபத்தில் ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்தினார். இதில், இரண்டு பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவரை, போலீசார் சுட்டுக் கொன்றனர். விசாரணையில், அவருடைய பெயர், உஸ்மான் கான், 28, என்பதும், ஏற்கனவே பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர் என்பதும் தெரிய வந்தது.

லண்டன் பங்குச் சந்தை கட்டடத்தில் தாக்குதல் நடத்த சதி தீட்டியதாக கைது செய்யப்பட்டு, 2013ல், அவருக்கு, 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்தாண்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டிருந்தார். பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இவருடைய குடும்பம் இருப்பதும், தன் சிறு வயதில் அங்கு அவர் இருந்ததும் தெரிய வந்தது.


latest tamil newsஇந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 'லண்டன் பாலத்தில் நடந்த தாக்குதலில் ஈடுபட்டவர், ஐ.எஸ்., வீரர்' என, அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான ஆதாரம் எதையும் அது காட்டவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar Thamizhlan - Chennai,இந்தியா
02-டிச-201914:55:59 IST Report Abuse
Kumar Thamizhlan அதெப்படி வச்சவன் நாங்கள் தான் வச்சோம் என்று எப்பொழுதுமே பொறுப்பேற்கிறார்கள் தவறு செய்தவன் எப்போதாவது வேறு எதிலாவது வொற்றுக்கொள்கிறானா ஆச்சரியமான கேள்விக்குறி
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
02-டிச-201913:50:08 IST Report Abuse
elakkumanan எல்லா துரோகங்களுக்கும் ஒரு முடிவு உண்டு.. இங்கிலாந்து ஒரு காலத்தில்... இன்று....இஸ்லாந்து.. எல்லா வசதியும், வாய்ப்பும் கொடுத்துவிட்டால்... இந்த கூட்டம் (பாகிஸ்) மாறிவிடும் என்று இஸ்லாந்து நம்பியது. பாகிஸ் கூட்டத்தை ஆதரித்து, இந்தியா மூஞ்சியில் கரி பூசி.. அதன் மூலமாக... தான் ஒரு பெரிய யோக்கியமான மதசார்பற்ற நாடுன்னு காட்டி பீத்தறதுக்கு போட்ட திட்டம்.. இந்தியாவிற்கும், இந்தியர்களுக்கும் செய்த துரோகம்... பேசிய பேச்சு.. திருடிய சொத்து.. எல்லாம் திரும்ப வருது.. இனி, இதுவே உங்கள் நாளிதல்களின் தினசரி சேதியாக இருக்கும். இப்பிடித்தான் ஒரு அம்பது வருசமா.. நாங்க அனுபவிச்சோம்.. செய்த வினை .... விடவே விடாது.. வாழ்க இஸ்லாந்து....
Rate this:
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
02-டிச-201913:37:28 IST Report Abuse
dandy பிரிட்டிஷ் அரசியல் வாதிகளும் ..அரசும் தாங்கள் எதோ சடடத்தின் பிரகாரம் செயல்படுபவர்கள் என்று கூவுபவர்கள் ..இந்த கொலையாளி மாத்திரம் அல்ல. இன்னும் 26 பயங்கரவாதிகள் தண்டனை காலம் முடியும் முன்னரே விடுவிக்க பட்டு உள்ளார்கள் ..ஆக..ஆக நாய் கடிக்கும் என்று சொல்லி அவிழ்த்து விட்டால் என்ன நடக்கும்? ஐரோப்பாவில் எந்த வசிவிட பத்திரம் இன்றி ..தங்க ..வேலை செய்ய சிறந்த ஒரே நாடு ..இந்த பிரிட்டன் நாடுதான் ..இதனால் தான் அந்த மதத்தினர் இங்கு போய் குவிகின்றார்கள். பிரிட்டன் இல் பல நகரங்கள் இன்று அந்த நாட்டு வெள்ளை பிரஜைகள் கூட நுழையமுடியாது ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X