பொது செய்தி

தமிழ்நாடு

எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

Added : டிச 02, 2019
Advertisement

திருப்பூர்:தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் நேட்டிவ் மெடிக்கேர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, கலை நிகழ்ச்சியுடன் கூடிய, விழிப்புணர்வு பேரணி நடந்தது.அவிநாசி ரோடு, புஷ்பா சந்திப்பில் அருகில் துவங்கிய இப்பேரணியை, எம்.எல்.ஏ., விஜயகுமார், துவக்கி வைத்தார்.தலைமை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன், ஏ.ஆர்.டி., மருத்துவ அலுவலர் லதா, டிரஸ்ட் தலைவர் சங்கர்நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.விழிப்புணர்வு பேரணியில் பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில், பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அப்பாச்சி நகரில், விழிப்புணர்வு கூட்டமும் நடத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X