சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடித்து செல்லப்பட்ட மாற்றுப்பாதை

Added : டிச 02, 2019
Advertisement
 அடித்து செல்லப்பட்ட மாற்றுப்பாதை

மங்கலம்பேட்டை:கோ.பூவனுார் - மாத்தூர் சாலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாற்றுப்பாதையை, உதவி கோட்ட பொறியாளர் பார்வையிட்டார்.

மங்கலம்பேட்டை அடுத்த கோ.பூவனுார் - மாத்தூர் சாலை வழியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இத்த சாலையில் இருந்த தரைப்பாலம் மற்றும் ஓடை பாலத்தை இடித்து அகற்றி, ரூ.3 கோடி மதிப்பில், உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இதனால், வாகனங்கள் செல்ல ஏதுவாக அருகில் மாற்றுப்பாதை அமைக்கபட்டது. கடந்த ஒரு வாரமாக பெய்துவரும், கனமழையில் ஏற்பட்ட வெள்ளத்தில், மாற்றுப்பாதை அடித்து செல்லப்பட்டது.இதனை, உதவி கோட்ட பொறியாளர் நல்லதம்பி நேற்று ஆய்வு செய்தார். சாலை ஆய்வாளர் அருணகிரி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X