சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழையால் பாதிப்பு மறியலில் ஈடுபட முயற்சி

Added : டிச 02, 2019
Share
Advertisement
பெண்ணாடம்:குடியிருப்புகளில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தக்கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.பெண்ணாடம் அருகே, வெண்கரும்பூர் புதுகாலனியில் கழிவுநீர் வடிகால் வாய்க்காலை அதே பகுதியை சேர்ந்த தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதால் கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேற வழியின்றி, தெருவில் தேங்கி நிற்கிறது.கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக புது

பெண்ணாடம்:குடியிருப்புகளில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தக்கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

பெண்ணாடம் அருகே, வெண்கரும்பூர் புதுகாலனியில் கழிவுநீர் வடிகால் வாய்க்காலை அதே பகுதியை சேர்ந்த தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதால் கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேற வழியின்றி, தெருவில் தேங்கி நிற்கிறது.கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக புது காலனியில், மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால், மிகுந்த சிரமம் அடைந்தனர்.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 10:30 மணியளவில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட முயன்றனர்.

தகவலறிந்து வந்த நல்லுார் ஒன்றிய துணை பி.டி.ஓ., மணிகண்டன், ஊராட்சி செயலர் சுரேஷ் ஆகியோர் கிராம மக்களிடம் சமாதானம் பேசினர்.வரும், 5ம் தேதிக்குள் வடிகால் வசதி ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்து, தேங்கி நிற்கும் மழைநீரை மோட்டார் மூலம் அப்புறப்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர். அதையேற்று, காலை 11:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X