பொது செய்தி

தமிழ்நாடு

இட்லி பொடிக்கு உலர்த்தப்படும் செமக்கை இறால்

Added : டிச 02, 2019
Advertisement

பழவேற்காடு : இட்லி பொடி தயாரிப்பதற்காக, மீனவ பெண்கள் செமக்கை இறால்களை வாங்கி இறங்குதளம் பகுதியில், உலர்த்தி வருகின்றனர்.

பழவேற்காடு கடல் மற்றும் ஏரியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் வலையில், டைகர், வெள்ளை, செமக்கை, பூச்சி உள்ளிட்ட இறால் வகைகள் கிடைக்கின்றன.மீனவ பெண்கள் இந்த இறால்களை மொத்தமாக வாங்கி, அதை ரகம் வாரியாக பிரித்து, வெள்ளை, டைகர், பூச்சி வகைகளை அன்றாட விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

செமக்கை இறால்களை, நன்கு சுத்தப்படுத்தி, உலர வைக்கின்றனர்.இந்த வகை இறால்களை அரைத்து, சுவையான இட்லி பொடி தயாரிக்கப்படுவதாகவும், அதுபோன்ற பொடி தயாரிப்பவர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்வதாகவும், மீனவ பெண்கள் கூறுகின்றனர். மீன்பிடி இறங்குதளம் பகுதியில், செமக்கை இறால்களை, மீனவ பெண்கள் சுத்தம் செய்து, நன்கு உலர்த்தி, ஒரு கிலோ, 150 - 200 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.

இது குறித்து மீனவ பெண்கள் கூறியதாவது:அளவில் சிறிதாக இருப்பதால், இதை நேரிடையாக உண்பதில், பொதுமக்களிடம் வரவேற்பு இருப்பதில்லை.அதேசமயம், சுத்தப்படுத்தி உலர்த்திய செமக்கை இறால்களில், குழம்பு வைக்கும்போது, மிகவும் ருசியாக இருக்கும் என்பதால், கிராமப்புறங்களில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதனால், இந்த வகை இறால்களை உலர்த்தி விற்பனை செய்கிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X