தவிப்பு !:வினாத்தாளுக்கு மாணவர்களிடம் வசூலால் ;பெற்றோர், மாணவர் அமைப்புகள் புகார் | Dinamalar

தமிழ்நாடு

தவிப்பு !:வினாத்தாளுக்கு மாணவர்களிடம் வசூலால் ;பெற்றோர், மாணவர் அமைப்புகள் புகார்

Added : டிச 02, 2019

சிவகங்கை:அரசு பள்ளி மாணவர்களிடம் வினாத்தாள் அச்சடிக்க ரூ.50 முதல் 100 வரை கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர், மாணவர் அமைப்பினர் புகார் தெரிவிக்கின்றனர்.

மாவட்ட அளவில் நடக்கும் பருவ, காலாண்டு, அரையாண்டு தேர்வுக்கென 6 முதல் 8 ம் வகுப்புக்கு ரூ.50, 9 , 10 ம் வகுப்பு ரூ.80, பிளஸ் 1, 2க்கு ரூ.100 பெறுகின்றனர். இப்பணத்தை பெற்றோரிடம் கேட்டால், அரசு அனைத்து பொருளையும் இலவசமாக தரும்போது, வினாத்தாள் அச்சடிக்க எப்படி பணம் கேட்பார்கள் என மாணவர்களை சந்தேக கண்ணுடன் பார்க்கின்றனர். இதனால், கிராமப்புற ஏழை, நடுத்தர மாணவர்கள் பள்ளியில் கேட்கும் பணத்தை பெற்றுத்தர முடியாமல் தவிக்கின்றனர்.

பொதுவாக தனியார் பள்ளிகள் ஒரு மாணவரிடம் 5 பாடத்திற்கும் வினாத்தாள் அச்சடிக்க தபால் செலவு உட்பட ஆண்டுக்கு 18 ரூபாய் தான் வசூலிக்கிறது. ஆனால் அரசு பள்ளிகளில்
கூடுதல் கட்டணம் வசூலிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மிஞ்சும்:

இது குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஆண்டுக்கு 6 முதல் 8 ம் வகுப்புக்கு ரூ.15, 9 மற்றும் 10 ம் வகுப்புக்கு ரூ.20, பிளஸ் 2 விற்கு ரூ.25 தான் செலவாகும். ஆனால், கூடுதலாக வாங்குவதன் மூலம், எஞ்சிய மிச்ச தொகையில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நிரப்பும் ஆசிரியருக்கு சம்பளம் மட்டுமே வழங்க விதிமுறை உண்டு.

வினாத்தாள் அச்சடிக்க வசூலிக்கும் தொகையில் ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வரை மிச்சமாகும். இதை என்ன செய்கிறார்கள் என தெரிவியல்லை. சில ஆண்டுக்கு முன் 11 லட்ச ரூபாய் வரை மிச்சம் இருந்தது. ஆனால், இன்றைக்கு ஜல்லி காசு கூட இல்லை, என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X