விருத்தாசலம்:விருத்தாசலம், எருமனுார் ரோடு, வானவில் நகரில், பழமலை ஸ்ரீரடி சாய்பாபா கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
நிகழ்ச்சிக்கு, ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர் சந்த் தலைமை தாங்கினார். டிரஸ்ட் நிர்வாகிகள் ஜெயின் ஜூவல்லரி ரமேஷ் சந்த், மூத்த வழக்கறிஞர் பாலசந்திரன் வரவேற்றனர்.கூடுதல்மாவட்ட அமர்வு நீதிபதி இளவரசன், கூடுதல் சார்பு நீதிபதி மகாலட்சுமி, அரசு வழக்கறிஞர் விஜயகுமார், மூத்த வழக்கறிஞர்கள் மெய்கண்டநாதன், முருகவேல், சண்முகம், தொழிலதிபர் சந்தோஷ்குமார், டாக்டர் குலோத்துங்கன், வசந்த நிலையம் பாஸ்கர், வித்யா மந்திர் பள்ளி தாளாளர் விஸ்வநாதன் உட்பட நெய்வேலி சாய்பாபா கோவில் நிர்வாகிகள், ரோட்டரி, அரிமா, வர்த்தக சங்கம் மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.முன்னதாக, ஸ்ரீரடி சாய்பாபா படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, கோவில் கட்டுமிடத்தில் அடிக்கல் நடப்பட்டது.