தமிழ்நாடு

முயற்சி, உழைப்பு, பயிற்சி இருந்தால் சாதிக்கலாம்; 'சக்சஸ் மந்த்ரா' நிகழ்ச்சியில் கலெக்டர் அறிவுரை

Added : டிச 02, 2019
Advertisement
 முயற்சி, உழைப்பு, பயிற்சி இருந்தால் சாதிக்கலாம்; 'சக்சஸ் மந்த்ரா' நிகழ்ச்சியில் கலெக்டர் அறிவுரை

திருவள்ளூர் : 'மாணவர்கள் விடா முயற்சி, உழைப்பு மற்றும் பயிற்சி மேற்கொண்டால் அனைத்து துறையிலும் சாதிக்கலாம்' என, 'தினமலர்' நாளிதழ் சார்பில், திருவள்ளூரில் நேற்று நடந்த, 'சக்சஸ் மந்த்ரா' நிகழ்ச்சியில், திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ஆலோசனை வழங்கினார்.

'தினமலர்' நாளிதழ் சார்பில், மாணவ - மாணவியரின் வாழ்வியல் வெற்றியை உறுதி செய்யும் வகையில், 'சக்சஸ் மந்த்ரா - - ஜெயித்துக் காட்டுவோம் 2.0' எனும் வழிகாட்டு தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.அமிர்தா விஸ்வ வித்யா பீடம் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியில், பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளவும், புதிய பாடத் திட்டத்தின் கீழ் வளமான எதிர்காலத்தை பெறவும், தேர்வு காலங்களில் உடல் நலம், மன நலத்தை பாதுகாக்கவும், மாணவர்களுக்கு கல்வியாளர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

'சக்சஸ் மந்த்ரா - ஜெயித்துக் காட்டுவோம் 2.0' வழிகாட்டுதல் நிகழ்ச்சி, திருவள்ளூர், சாந்தி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. ஆலோசனைகாலை, 7:30 மணி முதல், கொட்டும் மழையிலும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் தங்களது பெற்றோருடன் அரங்கில் குவியத் துவங்கினர்.நிகழ்ச்சியில், பொதுத் தேர்வை பயமின்றி எழுதுவதற்கான ஆலோசனைகள், புதிய பாடத் திட்டம் தயாரிப்பதற்கான காரணம், நோக்கம், புதிய பாடத் திட்டத்தின் கீழ் பொதுத்தேர்வு நடைபெறும் விதம் உட்பட பல்வேறு தலைப்புகளில் ஆலோசனை வழங்கப்பட்டது.

தவிர, மாணவ - மாணவியர் அனைவருக்கும் குறிப்புகள் மற்றும் வினாக்கள் அடங்கிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.மேலும், புதிய பாடத் திட்டம், கடினமே அல்ல; மாணவர்களுக்கு சுயமாக சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளவும், அதன்மூலம் தேர்வுகளை எதிர் கொண்டு, எதிர்கால வாழ்க்கையில் வெற்றி பெற்று, சாதனை படைக்கும் ரகசியத்தையும், கல்வியாளர்கள் ஆலோசனை வழங்கினர். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விருப்பம்

நிகழ்ச்சியில், திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:மாணவர்களுக்கு சரியான நேரத்தில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'சக்சஸ் மந்த்ரா' நிகழ்ச்சி நடத்துகிறது. இதற்காக, 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி தெரிவித்து, பாராட்டுகிறேன்.இந்நிகழ்ச்சியில், மாணவர்கள் பங்கேற்றதன் மூலம், வெற்றிக்கான முதல் படியில், அடியெடுத்து வைத்துள்ளீர். அடாத மழையிலும், இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ளதை பார்க்கும் போது, மாணவர்களுக்கு எதிர்காலம் காத்திருக்கிறது.

புதிய பாடத் திட்டம் சிறந்த வல்லுனர் குழுவால், சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதை, நன்கு உணர்ந்து, படித்தால், தேசிய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியும்.மாணவர்கள் மொபைல் போன், லேப்டாப் ஆகியவற்றை பாடத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். விளையாட்டு, சினிமா என, தவறாக பயன்படுத்தினால், வாழ்க்கையின் கீழ்மட்டத்திற்கு சென்றுவிடுவீர்.மாணவர்கள், 30 நிமிடம் முழு மனதுடன் படித்துவிட்டு, சிறிது நேரம் அவர்களுக்கு பிடித்த விளையாட்டுகள் விளையாடலாம்.

கடினமான பாடம் என்றால், அதன் மீது விருப்பம் கொண்டு படிக்க வேண்டும்.முழு ஈடுபாடுடன் படித்தால் வாழ்க்கையில் உயர முடியும். சமூகத்தில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை, தேடிச் சென்று, வாழ்க்கையில் உயர்ந்த பதவிகளை அடையலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X