விருத்தாசலம்:விருத்தாசலத்தில் 4 கோடியே 33 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலைச்செல்வன் எம்.எல்.ஏ., வழங்கினார்.
விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தாசில்தார் கவியரசு தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார், தனி தாசில்தார் செல்வமணி முன்னிலை வகித்தனர். துணை தாசில்தார் முருகன் வரவேற்றார்.முதல்வரின் சிறப்பு குறைதீர்ப்பு முகாமில் மனு வழங்கிய, 996 பயனாளிகளுக்கு 4 கோடியே 33 லட்சத்து 72 ஆயிரத்து 455 ரூபாய் மதிப்பில் இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை, கலைச்செல்வன் எம்.எல்.ஏ., வழங்கினார்.
முன்னாள் பேரூராட்சி சேர்மன் பாஸ்கரன், துணை தாசில்தார்கள் அன்புராஜ், வேல்முருகன், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், வி.ஏ.ஓ., ராமச்சந்திரன், நகர துணைச் செயலர் சத்யா செல்வம், எம்.ஜி.ஆர்., மன்றம் நடராஜன், இளைஞரணி அரப்ஷா, முன்னாள் ஊராட்சி தலைவர் வீரபாண்டியன், கார்குடல் சவுந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.