ஆபத்தின் விளிம்பில் பள்ளி மாணவர்கள் பஸ் பயணம்

Added : டிச 02, 2019
Advertisement
 ஆபத்தின் விளிம்பில் பள்ளி மாணவர்கள் பஸ் பயணம்

கும்மிடிப்பூண்டி : ஆபத்தின் விளிம்பில் பள்ளி மாணவர்கள், பஸ்சில் பயணிப்பது அன்றாட நிகழ்வாகி போனது. பள்ளி நேரத்தில், கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும், கே.எல்.கே., அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து செல்கின்றனர்.பள்ளி நேரத்தில், போதிய அளவில் அரசு பஸ்கள் இயக்கப்படாததால், இலவச பஸ் பாஸ் வசதி இருந்தும், ஷேர் ஆட்டோக்களில் பணம் கொடுத்து, பள்ளிக்கு சென்று வர வேண்டிய நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர்.

வேறு வழியின்றி பஸ்சில் பயணிக்கும் மாணவர்கள், நிரம்பி வழியும் கூட்டத்திற்கு மத்தியில், ஆபத்தான முறையில், படிகளில் தொங்கியபடி பயணிக்கின்றனர். மாணவர்களை கட்டுப்படுத்த முடியாத பஸ் ஓட்டுனரும், நடத்துனரும், ஆபத்தாக பயணிப்பதை கண்டுகொள்வதில்லை.

இதனால், கும்மிடிப்பூண்டி பகுதியில், காலை மற்றும் மாலை நேரத்தில், அரசு பஸ்களில், பள்ளி மாணவர்கள் ஆபத்தின் விளம்பில் பயணிப்பது அன்றாட நிகழ்வாகி போனது.மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X