பொது செய்தி

தமிழ்நாடு

வயலுார் ஏரியின் கரை உடையும் அபாயம்

Added : டிச 02, 2019
Advertisement
 வயலுார் ஏரியின் கரை உடையும் அபாயம்

விருத்தாசலம்:விருத்தாசலம் வயலுார் பெரிய ஏரியில் வெள்ளம் சூழ்ந்து, கரைகள் உடையும் நிலையில் இருப்பதால், 1,000 ஏக்கர் விளைநிலங்கள் மூழ்கும் அபாயம் உள்ளது.

விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையோரம், வயலுாரில் 4 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இதன் மூலம் வயலுார், நாச்சியார்பேட்டை, சின்னவடவாடி, பெரிய வடவாடி, புதுக்குப்பம், எருமனுார் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 1,500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்றன.நாளடைவில், வயலுார் ஏரி துார்ந்து முட்புதர்கள் மண்டியதால், முழு கொள்ளளவு நீர்ப்பிடிப்பு செய்ய முடியாமல், சாலையிலும் விளைநிலங்களிலும் தண்ணீர் வழிந்தோடி வீணாகிறது.இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு சாலையின் மறுபுறம் உள்ள கவணை, சித்தேரிக்குப்பம், சின்னபண்டாரங்குப்பம் கிராமங்களில் இருந்து வெள்ள நீர் வழிந்தோடி, ஏரயில் நிரம்பி வருகிறது. இதனால் ஏரி விரைவாக நிரம்பி, முழு கொள்ளளவு எட்டும் நிலையில் உள்ளது. அதில், தாழ்வாக உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது மதகுகளில் தண்ணீர் நிரம்பி வழியும் நிலையில் இருப்பதால், அப்பகுதியில் கரை உடையும் அபாயம் உருவாகியுள்ளது.

இதனால், கரைக்கு மறுபகுதியில் 1,000 ஏக்கரில் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து கிராம விவசாயிகள் கூறுகையில், 'கடந்த 40 ஆண்டுகளாக ஏரி துார்வாரப்படாததால், வெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது, விரைவில் நிரம்பி கரைகள் உடைந்து, வேளாண் பயிர்களை நாசம் செய்கின்றன. எனவே, வயலுார் பெரிய ஏரியை துார்வாரி, மழைநீர் வீணாவதை தடுக்க வேண்டும்' என்றனர்.இதுபோல், செம்பளக்குறிச்சி ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரில் மூழ்கியதால், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X