பொது செய்தி

தமிழ்நாடு

பூந்தமல்லியில் 9.6 செ.மீ. மழை

Added : டிச 02, 2019
Advertisement

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், இரவு, பகலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில், சில நாட்களாக வடகிழக்கு பருவமழை, வலுத்துள்ளது. இரவு நேரத்தில், மிதமான மழை பெய்து வந்த நிலையில், இரண்டு நாட்களாக, பலத்த மழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் அதிகாலை முதல், நேற்று இரவு வரை, விட்டு விட்டு, பலத்த மழை பெய்து வருகிறது.தொடர் மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.மாவட்டத்தில் அதிகபட்சமாக, பூந்தமல்லியில், 9.60 செ.மீட்டர் மழை பதிவாகியது.

பூண்டிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வடகிழக்கு பருவமழை காரணமாக, பூண்டி நீர்பிடிப்பு பகுதிகளில், பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழையால், நீர்த்தேக்கத்திற்கு, வினாடிக்கு, 1,042 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.நீர்த்தேக்கத்தில் தற்போது, 989 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. நீர்வரத்து அதிகம் இருப்பதால், இணைப்பு கால்வாய் மூலம், புழல் ஏரிக்கு, வினாடிக்கு, 470 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X