பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு வாக்காளருக்கு 2 அடையாள அட்டை? விசாரணை நடத்த முடிவு

Added : டிச 02, 2019
Advertisement
 ஒரு வாக்காளருக்கு 2 அடையாள அட்டை? விசாரணை நடத்த முடிவு

பல்லடம்:பல்லடம் ஒன்றியம் கரைப்புதுார் ஊராட்சி பாச்சாங்காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பூபாலன், 33; விவசாயி.பூபாலன் கூறியதாவது:பனிரெண்டு ஆண்டுக்கு முன் பெற்ற வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் அட்டையை சமீபத்தில்தான் இணைத்தேன். சந்தேகத்தின் பேரில், மீண்டும் புதிய அட்டைக்கு, பெயரில் சிறு மாற்றங்கள் செய்து விண்ணப்பித்தேன்.
அதற்கு, ஏற்கனவே கொடுத்துள்ள ஆதார் அட்டையை சமர்ப்பித்தேன். எனது, ஆன்லைன் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. ஏற்கனவே, வரிசை எண்: 467ன்படி, அடையாள அட்டை வைத்துள்ள எனக்கு, புதிய வரிசை எண்ணாக, 1062 ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரே ஆதார் அட்டையை வைத்து மீண்டும் விண்ணப்பிக்க முடியும் என்றால், முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது.
தேர்தல் அதிகாரிகள் தொழில்நுட்ப தவறை சரிசெய்ய வேண்டும். புதிய விண்ணப்பத்தை ரத்து செய்து, பழைய வாக்காளர் அட்டையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.பல்லடம் தேர்தல் பிரிவு தனி தாசில்தார் மயில்சாமியிடம் கேட்டதற்கு, 'ஒரே ஆதார் அட்டையை வைத்து, மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு இல்லை.என்ன தவறு நடந்துள்ளது என்பது தெரியவில்லை. விசாரணை மேற்கொண்டபின்பே, இது குறித்து விளக்கம் அளிக்க முடியும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X