சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெள்ளத்தில் தத்தளித்த கிராம மக்கள் மீட்பு

Added : டிச 02, 2019
Advertisement
 வெள்ளத்தில் தத்தளித்த கிராம மக்கள் மீட்பு

வடலுார்:வடலுார் அடுத்த மேலகொளக்குடி கிராத்தில் மேட்டுக்காலனி பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்ததால் அப்பகுதியில் குடியிருந்த 40க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த 100 பேரை பேரிடர் மீட்பு குழு, தீயனைப்பு வீரர்கள் மீட்டு அரசு பள்ளியில் தங்க வைத்துள்ளனர்.

அப்பகுதியை அமைச்சர், கலெக்டர் பார்வையிட்டனர். நெய்வேலி, மந்தாரக்குப்பம், கம்மாபுரம் பகுதியில் அதிக அளவு மழை பெய்ததால் மேல்பரவனாற்றில் அதிக அளவில் தண்ணீர் வந்தது. என்.எல்.சி., இரண்டாவது சுரங்கத்தில் இருந்து அதிக அளவி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், மேல்பரவனாற்றில் கரிவெட்டி கிராமம் அருகே சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டது.இந்த தண்ணீர், மேலகொளக்குடி கிராமத்தில் உள்ள மேட்டுக்காலனி பகுதியை சூழ்ந்து கொண்டது. மேலும் மேலகொளக்குடி கிராமத்திற்கு வரும் சிமென்ட் சாலை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால், அப்பகுதி தனி தீவாக மாறியது.

மக்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது.தகவல் அறிந்த அமைச்சர் சம்பத், மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் சம்பவ இடத்திற்கு விரைந்து, மக்களை வெளியே அழைத்து வர நடவடிக்கை எடுத்தனர்.கடலுாரில் இருந்து வந்த பேரிடர் மீட்பு குழுவினர், குறிஞ்சிப்பாடி தீயணைப்பு வீரர்கள் 30க்கும் மேற்பட்டவர்கள், இந்த பகுதியில் சிக்கியவர்களை கயிறு கட்டி பத்திரமாக மீட்டு மேலகொளக்குடி அரசு தொடக்க பள்ளியில் தங்க வைத்த உள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X