பொது செய்தி

தமிழ்நாடு

பசுமைக்கு இனி பஞ்சம் இல்லை; தொட்டு விடத் துடிக்குது இலக்கு

Added : டிச 02, 2019
Advertisement
 பசுமைக்கு இனி பஞ்சம் இல்லை; தொட்டு விடத் துடிக்குது இலக்கு

திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் நேற்று, காங் கயம் சேனாபதி கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கு சொந்தமான இடத்தில், 2 ஆயிரத்து 130 மரக்கன்றுகள் நடப்பட்டன; இம்மாதத் துடன், ஐந்தாவது திட்ட இலக்கு பூர்த்தியாகிறது.மரக்கன்றுகளை நட்டு, திருப்பூர் மாவட்டத்தை, இயற்கை எழில் கொஞ்சும் பசுமையாக மாற்றும் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், கடந்த 2015ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டம் துவக்கப்பட்ட முதல் ஆண்டில், 1.35 லட்சம் மரக்கன்றுகள்; 2016ல், 2.25 லட்சம்; 2017ல், 1.55 லட்சம்; கடந்த 2018ல், 1.50 லட்சம் என, மொத்தம் 6.65 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.இந்தாண்டு, 1.50 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.காங்கயம் அருகே வள்ளியரச்சல் கிராமத்தில், சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கு சொந்தமான இடத்தில், நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டது. சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மைய தலைவர் சிவ சேனாபதி, அறங்காவலர் கார்த்திகேய சிவ சேனாபதி, கரூர் எம்.பி., ஜோதிமணி மற்றும் வனத்துக்குள் திருப்பூர் திட்ட குழுவினர், வெள்ளகோவில் நிழல்கள் அமைப்பு, காங்கயம் துளிகள் அமைப்பினர் பங்கேற்றனர்.770 காயா மரக்கன்றுகள்; 20 பூந்தி; 10 முந்திரி; 320 இலுப்பை; 300 ஆயன்; 500 நாவல்; 200 பலா; 10 அத்தி என, மொத்தம் 2 ஆயிரத்து 130 மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட இயக்குனர் குமார் கூறியதாவது:அப்துல்கலாம் நினைவாக, தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து, வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. வனத்துக்குள் திருப்பூர் திட்டம் 5ல், நடப்பு ஆண்டு, மொத்தம் 1.50 லட்சம் மரக்கன்று நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது; இதுவரை, 1.10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இம்மாதம், 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்து, இலக்கு எட்டப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X