பொது செய்தி

தமிழ்நாடு

வீணாகி வரும் மண்புழு உரக்கூடம்..

Added : டிச 02, 2019
Advertisement

கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி களில் பயன்பாட்டிற்கு வராமலேயே மண்புழு உரக்கூடம் சேதமடைந்து வீணாகி வருவது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட, 43 ஊராட்சிகளிலும், மண்புழு உரக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.அதாவது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், மக்கும், மக்காத குப்பை என, தரம் பிரித்து, மக்கும் குப்பையிலிருந்து மண்புழு இயற்கை உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொட்டகை மற்றும் மண்புழு வளர்க்க தொட்டிகள் என, மண்புழு உரக்கூடம் அமைக்கப்பட்டுள்ளன.இந்த தொட்டிகளில் வீடு மற்றும் கடைகளில் சேகரிக்கப்படும் குப்பையில், மக்கும் குப்பையான காய்கறி, பழம், இலை போன்றவை தரம் பிரிக்கப்படுகின்றன.

பின், தொட்டிகளில் கொட்டப்பட்டு, மண்புழுக்களை விட்டு, 75 நாட்கள் மாட்டுச் சாணம் தெளித்து, பராமரிக்க வேண்டும்.இந்த மண்புழு உரங்களை விவசாயத்திற்கு பயன்படுத்தினால் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற திட்டத்துடன், மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகை அமைக்கப்பட்டது.கடம்பத்துார் ஒன்றியத்தில், ஊராட்சி பகுதி களில் மண்புழு உரக்கூடம் அமைக்கப்பட்டு ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமடைந்து வருகிறது. இது பொதுமக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.

இது குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகை யில், 'ஊராட்சி பகுதிகளில், மண்புழு உரக்கூடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர் உரக்கூடத்தை சீரமைத்து, மண்புழு உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X