பொது செய்தி

தமிழ்நாடு

வாழைத்தார் ஒரு டன் பறிமுதல்: செயற்கை முறையில் பழுக்க வைப்பு

Added : டிச 02, 2019
Advertisement
 வாழைத்தார் ஒரு டன் பறிமுதல்: செயற்கை முறையில் பழுக்க வைப்பு

திருப்பூர்:திருப்பூர், தென்னம்பாளையம் மார்க்கெட்டில், மொத்தமாகவும், சில்லறையாகவும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை விற்கப்படுகின்றனஇங்கு, 10க்கும் மேற்பட்ட வாழைப்பழ மொத்த விற்பனை கடைகள் உள்ளன. வாழைத்தார்கள் செயற்கை முறையில் ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது.
நேற்று காலை, 5:00 மணிக்கு, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் அலுவலர்கள் கேசவராஜ், சதீஷ்குமார், ராமச்சந்திரன் அடங்கிய குழுவினர், திடீர் ஆய்வு மேற்கொண்டனர். வாழைப்பழ கடையில் சோதனையில் ஈடுபட்டபோது, ராஜூ என்பவருக்கு சொந்தமான கடையில், ரசாயன முறையில் பழங்கள் பழுக்கவைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அங்கிருந்து, ஒரு டன் அளவில் வாழைப்பழ தார்கள் கைப்பற்றப்பட்டன.
விஜயலலிதாம்பிகை கூறுகையில், ''வாழைக்காய்களை பழுக்க வைக்க, பூச்சிக் கொல்லி மருந்தான எத்திபான் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஐந்து லிட்டர் தண்ணீரில், 7 மி.லி., அளவில் எத்திபான் கலந்து, வாழைப்பழங்கள் மீது தெளிக்கப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டது.பறிமுதல் செய்யப்பட்ட பழங்கள் அழிக்கப்படும். உரிமையாளர் மீது, வழக்குப்பதிவு செய்யப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X