பொது செய்தி

தமிழ்நாடு

வனத்துக்குள் பூந்தி, சாப்பிட அல்ல... வளர்க்க!

Added : டிச 02, 2019
Advertisement

வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், இன்று மற்ற மரங்களோடு, பூந்தி மரக்கன்றுகளும் நடப்பட்டன. அதென்ன பூந்தி மரம்? சபின்தாஸ் எமார்ஜினேட்டஸ் என்கிற தாவரவியல் பெயர் கொண்ட, சப்பின்டேசியே குடும்பத்தைச் சேர்ந்ததுதான் இந்த பூந்தி மரம். மரத்தின் உலர்ந்த பழங்கள் பூந்திக் கொட்டை, பூவந்திக்கொட்டை, சோப்புக்காய் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. காடுகளில் வளரும் அரியவகை மரங்களில் இதுவும் ஒன்று.இந்த மரத்தின் காயை நீரில் ஊறவைத்து அரைத்து, உடலில் தேய்த்து குளித்தால், அழுக்குகள் நீங்கிவிடும். ஆந்திர மக்கள் இந்த காய்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
பூந்தி பழத்தின் தோல், பூஞ்சை, கிருமி வளர்ச்சியை கட்டுப்படுத்தி, தோலை பாதுகாக்கும். பூந்தி கொட்டைக்குள் இருக்கும் பருப்பு, கபத்தை வெளியேற்றும் மருந்தாக பயன்படுகிறது. பூந்தி கொட்டையை கழுவிய நீரில், தங்க நகைகளை போட்டு, தேய்த்தால், நகைகள் புதிதுபோல் ஜொலிக்கும். பூந்தி கொட்டைகளை ஊறவைத்த நீரில் அலசினால், பட்டுப்புடவைகளில் உள்ள கறைகள் நீங்கிவிடும். இப்படி ஏராளமான பயன்களை அளிக்கிறது. இந்த பூந்தி மரம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X