பொது செய்தி

தமிழ்நாடு

மணிமுக்தாற்றில் நீர்வரத்து மகிழ்ச்சியில் மக்கள்

Added : டிச 02, 2019
Advertisement
 மணிமுக்தாற்றில் நீர்வரத்து மகிழ்ச்சியில் மக்கள்

விருத்தாசலம்:தொடர் மழை காரணமாக, விருத்தாசலம் மணிமுக்தாற்றில் மழைநீர் கரைபுரண்டோடுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விருத்தாசலம் மணிமுக்தாறு, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீர்வரத்து இல்லாமல் வறண்டு கிடந்தது. நகரில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மணிமுக்தாற்றில் விடப்படுவதால், ஆன்மிக பக்தர்கள் கவலையடைந்திருந்தனர்.கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு, சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வழிந்தோடி வரும் மழைநீர், மேமாத்துார் அணைக்கட்டுக்கு வரத் துவங்கியது. நேற்று மாலை முதல், மேமாத்துார் அணைக்கட்டில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் வழியாக நேற்று மாலை 4:30 மணிக்கு மேல், இருபுற கரைகளையும் அணைத்தபடி, தண்ணீர் கரைபுரண்டோட துவங்கியது. இதனை, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X