பொது செய்தி

தமிழ்நாடு

500 ஏக்கர் நெற்பயிர் மூழ்கியது

Added : டிச 02, 2019
Advertisement
 500 ஏக்கர் நெற்பயிர் மூழ்கியது

மங்கலம்பேட்டை:கனமழை காரணமாக மங்கலம்பேட்டை பகுதியில், சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.மங்கலம்பேட்டை அடுத்த சின்னவடவாடி, எ.வடக்குப்பம், கோ.பூவனுார், சித்தேரிக்குப்பம், கவணை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள், கடந்த மாதம் சம்பா சாகுபடி செய்திருந்தனர். கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழையினால், சின்னவடவாடி, சித்தேரிக்குப்பம், கவணை, கோ.பூவனுார் கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 500 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X