பொது செய்தி

தமிழ்நாடு

பூந்தி, சாப்பிட அல்ல... வளர்க்க!

Added : டிச 02, 2019
Advertisement

திருப்பூர்;காய்கறி வரத்து சரிவால், தமிழகத்தின் 'நம்பர் 1' உழவர் சந்தை என்ற இடத்தை திருப்பூர் தெற்கு உழவர் சந்தை இழந்துள்ளது.திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில், 115 கடைகள் இருந்தபோதும், பதிவு செய்து காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகள் எண்ணிக்கை, 500ஐ நெருங்குவதால், ஆறு பேருக்கு ஒரு கடை என அலுவலர்கள் பகிர்ந்து வழங்கியுள்ளனர்.நாள் ஒன்றுக்கு 120 டன் காய்கறிகள் வந்தன; ஐந்து லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியது. காய்கறி வரத்தில், மாநிலத்தின் 'நம்பர் 1' உழவர் சந்தையாக திகழ்ந்தது.
ஆனால், சமீப காலமாக சந்தைக்கான வரத்து, 70 டன்னாக குறைந்துள்ளது.ஒட்டுமொத்த காய்கறி வரத்தில் மூன்றில் ஒரு பங்கு வகித்தது தக்காளி. மொத்த வரத்து, 120 டன்னாக உள்ள சூழலில் தக்காளி மட்டும், 40 டன் வரும். தற்போது தக்காளி வரத்து, 20 முதல், 25 டன்னாக உள்ளது. தக்காளி, 15 டன் மற்ற காய்கறிகளில், 25 முதல், 30 டன் வரை காய்கறி வரத்து குறைந்ததால், மொத்த வரத்து, 70 டன்னாக சரிந்துள்ளது.
இதனால், அதிகாலை, 3:00 முதல், 7:00 மணி வரை நடக்கும் சந்தை, ஒரு மணி நேரம் முன்னதாக காலை, 6:00 மணிக்கே நிறைவு பெறுகிறது. உழவர் சந்தை அலுவலர்கள் கூறுகையில், 'வானிலை மாற்றம், தொடர் மழை காரணமாக, காய்கறி வரத்து, சற்று குறைந்துள்ளது. தை பிறப்புக்கு முன்பாக, காய்கறி வரத்து, 100 டன்னை எட்டும். காய்கறிகள் விரை வாக விற்று தீர்வதால் முன்கூட்டியே சந்தை நிறைவு பெறுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X