பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் கீரை விவசாயிகள் பாதிப்பு

Added : டிச 02, 2019
Advertisement
 மழையால் கீரை விவசாயிகள் பாதிப்பு

செங்குன்றம் : செங்குன்றம் அருகே, பலத்த மழையால், கீரைகள் சேதமடைந்து, விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

செங்குன்றம் சுற்றுவட்டாரத்தில், புழல் ஏரியை ஒட்டி, லட்சுமிபுரம், எராங்குப்பம், மேட்டுப்பாளையம், கிருஷ்ணாம்பேட்டை, பழைய பம்மதுகுளம், கோணிமேடு, சரத்கண்டிகை கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களிலும், புழல் ஏரியின் மேடான பகுதியிலும், அரைகீரை, சிறுகீரை, பாளை கீரை, வெந்தய கீரை, வெண்டை, பாகற்காய் மற்றும் காராமணி உள்ளிட்டவை விவசாயம் செய்யப்பட்டது. இரு தினங்களாக நீடிக்கும் பலத்த மழை மற்றும் ஏரிக்கு கிடைக்கும் கிருஷ்ணா நீர்வரத்து காரணமாக, கீரை பயிர்கள், தண்ணீரில் மூழ்கி, முழுமையாக சேதமடைந்தன.

சேதமானது போக, மீதமுள்ள கீரை, காய்கறிகளை, விவசாயிகள், அவசரமாக அறுவடை செய்ய வேண்டிய, நிலைக்கு தள்ளப்பட்டனர்.பழைய பம்மது குளம் விவசாயிகள் கூறியதாவது:கார்த்திகை மாதம் என்பதால், கீரை, காய்கறிக்கான வரவேற்பு அதிகரித்தது. நாங்களும், உற்சாகமாக விவசாயத்தில் ஈடுபட்டோம். 1 கிலோ வெண்டை விதை, 5,250 ரூபாய், காராமணி விதை, 520 ரூபாய், வெந்தய கீரை விதை, 110 ரூபாய் வீதம் வாங்கிபயிரிட்டோம்.

சில நாட்களாக தொடரும் மழை மற்றும் புழல் ஏரி நீர்வரத்தால், பயிர்கள் சேதமடைந்துள்ளன. மீதமுள்ளவற்றை, மீட்க போராடிக் கொண்டிருக்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X