திருவான்மியூர் : இரண்டு சிறுவர்கள், இருசக்கர வாகன பெட்ரோல் குழாயை திறந்து, பேப்பரில் தீவைத்து விளையாடியதில், வாகனம் தீப்பிடித்தது.
திருவான்மியூர், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர், மகேஷ், 28. இரு தினங்களுக்குமுன், திருவண்ணாமலை சென்றார். இவரது, இருசக்கர வாகனத்தை வீட்டின்முன் நிறுத்தி இருந்தார்.நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியைச் சேர்ந்த, ஐந்து வயதுள்ள இரண்டு சிறுவர்கள், வாகனத்தை ஒட்டி, பேப்பரில் தீ வைத்து விளையாடினர். மழைநீரில் எரியாததால், வாகன பெட்ரோல் குழாயை திறந்து, பெட்ரோல் ஊற்றி, தீ வைத்தபோது, வாகனம் முழுவதும் தீ பிடித்து எரிந்தது.ஒரு சிறுவன் கையில் லேசான காயம் ஏற்பட்டது. திருவான்மியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.