சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கனமழைக்கு ஓடையில் வெள்ளப்பெருக்கு: தீவளூரில் போக்குவரத்து பாதிப்பு

Added : டிச 02, 2019
Advertisement
 கனமழைக்கு ஓடையில் வெள்ளப்பெருக்கு: தீவளூரில் போக்குவரத்து பாதிப்பு

பெண்ணாடம்:கனமழை காரணமாக கோனுார் சின்னாத்துார் வாரி ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பெண்ணாடம் - தீவளூர் இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெண்ணாடத்தில் இருந்து கோனுார், தாழநல்லுார் வழியாக தீவளூர் செல்லும் சாலையில், பஸ், லாரி, பள்ளி, கல்லுாரி வாகனங்கள் உட்பட நுாற்றுக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன. மேலும், நந்திமங்கலம், வடகரை, அருகேரி, எரப்பாவூர், கோனுார், தாழநல்லுார், தீவளூர், சாத்துக்கூடல் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இச்சாலை வழியாக பெண்ணாடம், விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் உட்பட பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.கோனுார் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சின்னாத்துார் வாரி ஓடை மீதுள்ள தரைப்பாலம் வலுவிழந்ததால், கடந்த 5 மாதங்களுக்கு முன் புதிதாக பாலம் கட்டுமான பணி துவங்கி, நடந்து வருகிறது. அருகில் தற்காலிகமாக செம்மண் சாலை அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர் கனமழை பெய்வதால், சின்னாத்துார் வாரி ஓடைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஓடையின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக செம்மண் சாலை சேதமடைந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சாலையின் குறுக்கே வாகனங்கள் எதுவும் செல்லாதவாறு தடை ஏற்படுத்தினர்.இதனால் தீவளூர், தாழநல்லுார் பகுதி கிராம மக்கள், மாணவர்கள் வடகரை, நந்திமங்கலம் வழியாக 5 கி.மீ., சுற்றி பெண்ணாடம், திட்டக்குடி, பெரம்பலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X