சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணம் பறிக்க முயன்ற 5 பேர் கைது

Added : டிச 02, 2019
Advertisement

சென்னை : தி.நகரில் உள்ள, பிரபல நகை கடை அதிபரை மிரட்டி, 1 கோடி ரூபாய் பணம் பறிக்க முயன்ற, 'டுபாக்கூர்' செய்தியாளர் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட, ஐந்து பேரை, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துனர்.

திருவேற்காடு, சுந்தரசோழவரம் பகுதியைச் சேர்ந்தவர், தனசேகர், 27; 'டுபாக்கூர்' செய்தியாளர். இவர், சில தினங்களுக்கு முன், தி.நகரில் உள்ள, பிரபல நகை கடை அதிபரிடம், 'நீங்கள் போலி நகை விற்கிறீர்கள். 'இதனால், 1 கோடி ரூபாய் தர வேண்டும்' என, வழக்கறிஞர்களான, தன் கூட்டாளிகள், புதுப்பேட்டை அமானுல்லா, 39; ஸ்ரீராம், 27; திருவல்லிக்கேணி வெங்கடேசன், 44, ஆகியோருடன் சேர்ந்து, அவரை மிரட்டி உள்ளார்.

அதேபோல, மதுரை மாவட்டம், கோமதிபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், 30, என்பவர், சென்னையில், விபசார புரோக்கராக செயல்பட்டுள்ளார்.இவர்கள், ஐந்து பேரையும், கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்படி, போலீசார் நேற்று, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X