பொது செய்தி

தமிழ்நாடு

வடபழநி ஆண்டவர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

Added : டிச 02, 2019
Advertisement

சென்னை : கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, வடபழநி ஆண்டவர் கோவிலில் அருள்பாலிக்கும் சொக்கநாதருக்கு, 108 வலம்புரி சங்கினால், இன்று சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

இறைவன் அருளால் மனிதன் வயப்படுகிறான்;மனிதனின் ஆழ்ந்த பக்தியால், இறைவன் கட்டுப்படுகிறான். அந்த பக்தி வகைகளில் ஒன்று சங்காபிஷேகம்.தனி மகத்துவம்கார்த்திகை மாத சோமவாரத்தில், சிவாலயங்களில் சங்கில் புனிதநீர் நிரப்பி, சங்காபிஷேகம் செய்வது வழக்கம். வைணவத்தில் சங்கு வீரத்தின் சின்னமாகத் திகழ்கிறது. பகவான் கிருஷ்ணனின் பாஞ்சஜன்யம் என்ற சங்கொலி கேட்டு, குருஷேத்திரமே நடுங்கியது.சங்கு, இயற்கையாக கிடைக்கக் கூடியது. வெண்மையானது;

சுட்டாலும் வெண்மை தரும்.மனித மனங்களும் சங்கைப்போல, நிலையான தன்மையுடையதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே, சங்காபிஷேகம் செய்யப்படுகிறது.சிவாலயங்களில், 108, 1008 என்ற எண்ணிக்கையில், சங்குகளைப் பயன்படுத்தி, அபிஷேகம் செய்யப்படுகிறது. அதிலும், வலம்புரி சங்கில் செய்யும் அபிஷேகத்திற்கு, தனி மகத்துவம் உண்டு.கார்த்திகை சோம வாரம்அந்த வகையில், வடபழநி ஆண்டவர் கோவிலில் அருள்பாலிக்கும் சொக்கநாதருக்கு, கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, இன்று மாலை, 4:30 மணிக்கு, 108 வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

இதில், பக்தர்கள் பங்கேற்று, சுவாமியின் அருளைப் பெறலாம். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், துணைக் கமிஷனர்சித்ராதேவி ஆகியோர் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X