சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையில் வெள்ளப்பெருக்கு தீவு போல மாறிய கிராமங்கள்

Added : டிச 02, 2019
Advertisement
 சாலையில் வெள்ளப்பெருக்கு தீவு போல மாறிய கிராமங்கள்

மங்கலம்பேட்டை:சின்னவடவாடி சாலையின் குறுக்கே வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், சின்னவடவாடி, எ.வடக்குப்பம் கிராமங்கள் தீவு போல மாறி உள்ளது.

மங்கலம்பேட்டை அடுத்த சின்னவடவாடி, சாலையினை, சின்னவடவாடி, எ.வடக்குப்பம் கிராம மக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழையினால், இந்த சாலையின் குறுக்கே, நேற்று காலை குறைந்த அளவு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், பைக் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வந்தன.பகல் 3:00 மணியளவில் ஒரு கிலோ மீட்டர் துாரம் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால், சின்னவடவாடி, எ.வடக்குப்பம் கிராமங்கள் தீவு போல மாறியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X