பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் சேவை மாற்றம் :கோவை எக்ஸ்பிரஸ் ரயில் நாளை தாமத புறப்பாடு

Added : டிச 02, 2019
Advertisement

திருப்பூர்:பெருந்துறை யார்டில் பராமரிப்பு பணி நடப்பதால் நாளை இரு பாசஞ்சர், நான்கு எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய, பொறியியல் மேலாண்மை பணியை அவ்வப்போது சேலம் ரயில்வே கோட்டம் மேற்கொண்டு வருகிறது.நாளை பெருந்துறை 'யார்டில்' பராமரிப்பு பணி நடக்கிறது.இதையொட்டி, சேலம் - கோவை பாசஞ்சர் ஊத்துக்குளி வரை மட்டுமே இயக்கப்படும். திருப்பூர், கோவை வராது. மறுமார்க்கமாக ரயில் ஊத்துக்குளியில் இருந்து சேலம் வரை பயணிக்கும்.பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஓமலுாரில் இருந்து பெருந்துறைக்கு, 70 நிமிடம் தாமதமாக பயணிக்கும். ஆலப்புழா - தன்பாத் பொக்கரோ எக்ஸ்பிரஸ் போத்தனுாரில் இருந்து திருப்பூருக்கு, ஒரு மணி நேரம் தாமதமாக வந்து சேரும்.வழக்கமாக மதியம், 3:15க்கு புறப்படும் கோவை - சென்னை கோவை எக்ஸ்பிரஸ் நாளை, 3:55 மணிக்கு புறப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X